New Year 2022 Wishes in Tamil: புத்தாண்டு கொண்டாட இது தான் முக்கியம்... போன் இருந்தால் இது சாத்தியம்!
New Year 2022 Wishes in Tamil: 2022 புதிய ஆண்டுக்கான வாழ்த்துக்கள், செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை உங்கள் அன்புக்குரியவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
Happy New Year 2022 Wishes in Tamil: 2022 புதிய ஆண்டுக்கான வாழ்த்துக்கள், செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை உங்கள் அன்புக்குரியவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்....
2022 புத்தாண்டு இன்று இரவு நம் கதவை தட்ட இருக்கிறது. உங்களின் சிறந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கு சிந்தனைமிக்க செய்திகள் அல்லது புத்தாண்டு வாழ்த்து அட்டையை விட சிறந்த வழி எதுவுமில்லை என்றே கூறலாம். பழைய வெறுப்புகளையும், பழைய கவலைகளையும் புறந்தள்ளிவிட்டு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான நேரம்தான் புத்தாண்டு.
அந்த வகையில் 2021ஆம் ஆண்டு முடிவடைவதால் புதிய ஆண்டு சிறப்புமிக்கதாக இருக்க வேண்டும் என மக்கள் ஆர்வமுடன் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். எனினும் கொரோனா பரவல் நீண்டு வருவதாலும், புதிதாக ஒமிக்ரான் திரிபு தீயாய் பரவி வருவதாலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், வெளியே செல்வது மற்றும் விருந்து வைப்பது நல்லதல்ல. ஆனால் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அவர்களை கவரும் வகையில் புகைப்படங்கள், வாழ்த்து செய்திகள், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் அனுப்புவது எளிது. அதன் மூலம் நாம் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடுவோம்.
புத்தாண்டின் தொடக்கத்தில் ஒருவருக்கு நீங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்பினால், இதோ சில புத்தாண்டு 2022 வாழ்த்துகள், செய்திகள், புகைப்படங்கள் மற்றும் கவிதைகளை நீங்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்
“2022 உங்கள் வாழ்க்கையின் சிறந்த ஆண்டாக இருக்கும்.
வெற்றி, மகிழ்ச்சி என நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெற வேண்டும்.
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.”
“புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு உங்கள் சொந்த கதையை எழுதும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கட்டும்!”
“நல்ல அதிர்ஷ்டம், சிறந்த உணவு
வெற்றி மற்றும் நல்ல தூக்கம்,
பயணம் மற்றும் உண்மையான நண்பர்கள்
அமைதி, செழிப்பு என அனைத்தையும் பெற என் வாழ்த்துகள்
2022 இல் நுழையும்போது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்கள்!”
“இந்த இக்கட்டான நேரங்களிலும், நாம் நம் தைரியத்தைக் காத்துக்கொண்டு, நல்ல நாளைக்காகப் பிரார்த்திக்க வேண்டும். 2021 விடைபெறும்போது, புத்தாண்டு நம் அனைவருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்று நம்புவோம்.”
“நாளை முதல் 365 பக்கங்கள் கொண்ட வெற்று புத்தகம் கிடைக்க உள்ளது... நல்லதை எழுதுங்கள்!”
“நல்ல செய்திகளை மட்டுமே தரும் அற்புதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.”
Wish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021
do not follow desire, lest it diverts you from God’s path.🌟#ThursdayMotivation #nature #NewYear2022 pic.twitter.com/ju6xZ6szj0
— Arezoo (@Arezoo78772810) December 30, 2021
🎉💫🌟Happy New Year 💫🎉🍾💫🎉🥂
— Marie Nassar (@marie_nassar) December 31, 2021
Wish you all health,wealth,love and happiness in the New Year💫🎉May all your dreams come true in 2022🎉💫🎁🎄🍾🎉🥂#NewYear2022 🎉 #HappyNewYear 💫🍾 #NewYearEve 🥂🎊 pic.twitter.com/U3czLZZxcw
On the eve of #NewYear2022 - Namma Kovai. pic.twitter.com/ryOpPjF2Jf
— Kishore Chandran🇮🇳 (@Kishore36451190) December 31, 2021