GV prakash: “இது கனவு மாதிரி இருக்கு” - தேசிய விருது குறித்து நெகிழ்ந்த ஜி.வி.பிரகாஷ்.!
தேசிய விருது கிடைத்தது கனவு போன்று இருப்பதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் பேசியிருக்கிறார்.
தேசிய விருது கிடைத்தது கனவு போன்று இருப்பதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் பேசியிருக்கிறார்.
சூரரைப்போற்று படத்தின் பின்னணி இசைக்காக ஜிவிபிரகாஷ்குமாருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து பேசியிருக்கும் ஜிவிபிரகாஷ்குமார், “ தேசிய விருது கிடைத்ததை சுதா போனில் சொன்ன போது ஒரு கனவு போன்று இருந்தது.
சூரரைப்போற்று படத்தில் ஒரு குழுவாக நாங்கள் உழைத்தோம். அதற்கு இவ்வளவு விருதுகள் கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய முதல் தேசிய விருது இந்தப்படத்தில் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தில் சூர்யாவுக்கும் தேசிய விருது கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி. விருதுகள் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். ஒரு உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் போது, ஒரு நம்பிக்கை பிறக்கிறது. சரி இன்னும் வேலை செய்யலாம் என்று தோன்றுகிறது” என்று பேசினார்.
68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழில் வெளியான திரைப்படங்கள் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது. குறிப்பாக, இயக்குநர் சுதாகொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது, சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது சிறந்த பின்னணி இசைக்கான விருது சிறந்த திரைக்கதைக்கான விருது என 5 விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, சுதா கொங்கரா கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.
விருது விபரங்கள்
சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
சிறந்த அறிமுக இயக்குநர் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் ( சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)
சிறந்த தமிழ் படம் - சிவரஞ்சனியும் சில பெண்களும் ( இயக்கம் : இயக்குனர் வசந்த்)
சிறந்த துணை நடிகை - லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் சில பெண்களும்)
சிறந்த எடிட்டிஙல் – ஸ்ரீகர் பிரசாத் ( சிவரஞ்சனியும் சில பெண்களும்)
2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்தியாவில் திரைப்படம் எடுக்க உகந்த நகரமாக மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ‛சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ அன்றே கணித்து பாராட்டிய நடிகர் சூர்யா!
மேலும் படிக்க : Mandela Movie Awards: மண்டேலா திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநர் விருதுபெறும் மடோன் அஷ்வின்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்