Guru Somasundaram: ‛இந்தியன் 2ல் நடிக்க தயங்கி தயங்கி கேட்டார் ஷங்கர் சார்...’ குரு சோமசுந்தரம் பேட்டி!
நடிப்பில் எக்ஸ்ப்ளோர் செய்ய வேண்டும் என ஆசைப்படும் இந்த நடிகர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர் திரைப்படமாக 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இப்படம் வெற்றியின் உச்சிக்கு சென்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கிய நாள் முதல் பல தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமாகி சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு பிறகு தொடங்கி மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
விவேக் கதாபாத்திரத்தில் நடிக்கும் குரு சோமசுந்தரம் :
இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விவேக் இறப்பிற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள குரு சோமசுந்தரம் ஒப்பந்தமானார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலின் போது சில சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார் நடிகர் குரு சோமசுந்தரம். இவர் ஆரண்ய காண்டம், ஜோக்கர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Indian2 Update♥️
— Saloon Kada Shanmugam (@saloon_kada) August 23, 2022
Late Actor #Vivek Role Was Replaced By #Gurusomasundaram in Indian 2👌🏼🔥#KamalHaasan | #Anirudh | #Shankar pic.twitter.com/NBTl9tJ1jS
தயங்கிய இயக்குனர் ஷங்கர் :
இயக்குனர் ஷங்கர் நடிகர் விவேக் கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரத்தை ஒப்பந்தம் செய்ய மிகவும் தயங்கி தயங்கி கேட்டாராம். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் தனது ரோல் பற்றி தற்போது கூற இயலாது அதனால் படம் வெளியான பிறகு தெரிந்து கொள்ளுங்கள் என்றார். மேலும் இவர் நடிக்கும் காட்சிகள் இதுவரையில் முழுமையாக முடிவடையவில்லை. மீதம் இருக்கும் காட்சிகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாம்.
#Gurusomasundaram about #Indian2 Special work 💥💥😎😎 pic.twitter.com/hOQApsZDCW
— KamalHaasan 2.0 (@khrasigan83) October 19, 2022
கன்டென்ட் தான் காரணம் :
நடிகர் குரு சோமசுந்தரம் தற்போது வில்லன், ஹீரோ கதாபாத்திரம் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். நடிப்பில் எக்ஸ்ப்ளோர் செய்ய வேண்டும் என ஆசைப்படும் இந்த நடிகர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராம். நமது தமிழ் சினிமாவை ஒட்டுமொத்த தென்னிந்தியாவும் திரும்பிப் பார்க்க காரணம் நமது சிறப்பான கன்டென்ட் தான் என்கிறார். ஆனால் இன்று கன்டென்ட் எழுதுபவர்கள் குறைந்து விட்டார்கள். ஒரு சிறந்த கதை குறைந்த அளவிலா பட்ஜெட்டில் தயாரிக்க முடியம் என்பதை நிரூபித்த திரைப்படம் சர்ப்பட்டா பரம்பரை. படக்குழுவினர் அனைவரும் ஒன்று கூடி பேசினால் தான் சிறந்த கன்டென்ட் கிடைக்கும் என்றுள்ளார்.