மேலும் அறிய

Salman Khan: பாலிவுட்டில் பரபரப்பு..நடிகர் சல்மான்கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு.. போலீசார் விசாரணை

பாலிவுட் முன்னணி நடிகராக உள்ள சல்மான் கான் வீடு பாந்த்ராவில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை இவரது வீட்டு முன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர்.

நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் திரையுலகில் நடித்து தனக்கென தனியிடம் பிடித்தவர் சல்மான் கான். இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். 1988 ஆம் ஆண்டு பிவி ஹோ தோ ஐசியில்  என்ற படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கிய சல்மான் கானுக்கு 1989 ஆம் ஆண்டு வெளியான மைனே பியார் கியா படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படிப்பட்ட சல்மான் கானை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும் உண்டு. மான் வேட்டையாடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். 2015ல் கவனக்குறைவாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் உயிரிழந்தார். 

இப்படிப்பட்ட நிலையில் பாலிவுட் முன்னணி நடிகராக உள்ள சல்மான் கானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கடந்தாண்டு இவர் நடிப்பில் பதான்,  கிசி கா பாய் கிசி கி ஜான். டைகர் 3 ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. 

இவரது வீடு பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை இவரது வீட்டு முன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர். சத்தம் கேட்டு உடனடியாக வீட்டில் இருந்த காவலாளிகள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதுதொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget