Meetha Raghunath: படுகா பாரம்பரிய முறையில் திருமணம்: நான் எதிர்பார்க்காத ஒன்று: குட் நைட் நாயகி மீதா ரகுநாத் பதிவு!
Meetha Ragunath : பாரம்பரியமான படுகா (Badaga) முறையில் திருமணம் நடைபெற்றது எதிர்பார்க்காத ஒன்று என இன்ஸ்டாகிராம் மூலம் நீண்டபோஸ்ட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் மீதா ரகுநாத்.
சமீப காலமாக தனித்துமான முறையில் திருமணங்களை செய்து கொள்வதை இன்றைய இளைய தலைமுறையினர் விருப்படுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகை மீதா ரகுநாத்.
மணிகண்டன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'குட் நைட்' படம் மூலம் பிரபலமானவர் நடிகை மீதா ரகுநாத். 'முதல் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவரை ரசிகர்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்த்த திரைப்படம் 'குட் நைட்'. அதில் அவரின் அளவான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் மீதா ரகுநாதன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் அவரின் திருமணம் நடந்து முடிந்து அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டன. அவருக்கு சோசியல் மீடியா மூலம் அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
இந்நிலையில் மீதா ரகுநாத் தன்னுடைய திருமணம் பாரம்பரியமான படுகா முறையில் நடைபெற்றது குறித்தும் அதற்கான ஏற்பாடுகள் எப்படி நடைபெற்றது என்பது குறித்தும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். நீலகிரியை சேர்ந்த கிராமங்களில் உள்ள ஒரு பகுதி மக்கள் இது போன்ற திருமண முறையை காலம்காலமாக பின்பற்றி வருகிறார்கள்.
"பாரம்பரியமான படுகா முறையில் திருமணம் நடைபெற்றது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் காதலில் விழுவேன் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் அதை செய்தேன். அதே போல நான் எதிர்பார்க்காத ஒன்று தான் படுகா திருமணம். அது ஒரு அழகான கொண்டாட்டமாக இருந்தது. "மதில்" என்பது வில் போன்ற அமைப்பாகும், இது ஒவ்வொரு பாரம்பரிய படுகா குடும்பத்திலும் ஒரு புனித இடமாகும். நாங்கள் படுகா கிராமத்தில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் எங்களின் திருமணம் கலாச்சாரத்தோடு நெருக்கமானதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் விரும்பினோம்.
என்னுடைய வீட்டில் உள்ளவர்கள் கலை மேதைகள் என்பதால் மதில் மற்றும் அதைச் சுற்றிய அலங்காரங்களை என்னுடைய அம்மா யோசனையாக சொல்ல, அதை என்னுடைய சகோதரி முழுமையாக வடிவமைத்தார். என்ன வண்ணங்கள் உபயோகிக்க வேண்டும் என அனைத்தையும் அவர்களே வடிவமைத்தனர். இந்தத் திருமணத்தின் பெரும்பகுதி கலைநயத்தோடு இருந்தது.
View this post on Instagram
அன்பை கண்டுபிடிப்பது என்பது தெய்வீகமான ஒரு தருணம். ஆனால் அப்படிப்பட்ட அன்பு உங்கள் கண்முன்னால் தோன்றும் போது அதை அடையாளம் காணும் திறனும் அதை அடையும் தைரியமும் இருக்க வேண்டும். அதை எனக்கு வழங்கிய இந்த பிரபஞ்சத்திற்கு நான் நன்றி உள்ளவளாக இருப்பேன். நான் காதலித்தேன், திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அது ஒரு பாரம்பரியமான படுகா முறை திருமணமாக அமைந்தது போனஸ்" என நீண்ட குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை மீதா ரகுநாத்.