மேலும் அறிய
Advertisement
Golden Globe Winners 2023: ஆர்.ஆர்.ஆர் முதல் ஹவுஸ் ஆஃப் த ட்ராகன் வரை... கோல்டன் க்ளோப் விருது வென்றவர்களின் பட்டியல்!
ஆஸ்கார், பாஃப்டா வரிசையில் திரைத்துறையில் வழங்கப்படும் உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக கோல்டன் க்ளோப் விருதுகள் கருதப்படுகின்றன.
80ஆவது கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கும் விழா ஜனவரி 10ஆம் தேதி (இந்திய நேரப்படி இன்று (ஜன.11) காலை 6.30க்கு) கலிஃபோர்னியாவில் பிரம்மாண்டமாகத் தொடங்கி நடைபெற்றது.
கோல்டன் குளோப் விருது:
ஆஸ்கார், பாஃப்டா வரிசையில் திரைத்துறையில் வழங்கப்படும் உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக கோல்டன் க்ளோப் விருதுகள் கருதப்படுகின்றன.
மொத்தம் 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்தியாவின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்று கவனமீர்த்துள்ளது.
இதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிறகு கோல்டன் க்ளோப் வென்ற இரண்டாவது இந்தியர் எனும் பெருமையை எம்.எம்.கீரவாணி பெற்றுள்ளார்.
திரைப்படங்கள், தொலைக்காட்சி என இரண்டு பிரிவுகளில் வழங்கப்படும் கோல்டன் க்ளோப் விருதுகளை வென்ற மொத்த பட்டியல் பின்வருமாறு:
திரைப்படங்களுக்கான விருதுகள்
- சிறந்த திரைப்படம் (ட்ராமா) - த ஃபேபல்மேன்ஸ் - The Fabelmans
- சிறந்த திரைப்படம் (ம்யூசிக்கல்/காமெடி) - த பன்ஷீஸ் ஆஃப் இனிஷெரின் - The Banshees of Inisherin
- சிறந்த இயக்குனர் - ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க், த ஃபேபல்மேன்ஸ்.
- சிறந்த நடிகை (ட்ராமா) - கேட் பிளான்செட் (Cate Blanchett) - தார்
- சிறந்த நடிகர் (ட்ராமா) - ஆஸ்டின் பட்லர் (Austin Butler) - எல்விஸ்
- சிறந்த நடிகை (இசை/நகைச்சுவை) - ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்துக்காக மிச்செல் இயோவ் (Michelle Yeoh)
- சிறந்த நடிகர் (இசை/காமெடி) - ‘த பன்ஷீஸ் ஆஃப் இனிஷெரின்’ படத்துக்காக கொலின் ஃபாரெல் (Colin Farrell) விருது பெற்றார்.
- சிறந்த துணை நடிகை: பிளாக் பாந்தர் - வகாண்டா ஃபாரெவர் படத்துக்காக ஏஞ்சலா பாசெட் (Angela Bassett) விருது வென்றார்.
- சிறந்த துணை நடிகர் - ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்துக்காக கே ஹுய் குவான் (Ke Huy Quan)
- சிறந்த திரைக்கதை - த பன்ஷீஸ் ஆஃப் இனிஷெரின் படத்துக்காக மார்ட்டின் மெக்டொனாக் (Martin McDonagh)
- சிறந்த ஆங்கில மொழி அல்லாத திரைப்படம் - அர்ஜென்டினா, 1985 ஃப்ரம் அர்ஜென்டினா (Argentina, 1985 from Argentina)
- சிறந்த அனிமேஷன் திரைப்படம் - கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ - Guillermo del Toro's Pinocchio
- சிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்) - ஜஸ்டின் ஹர்விட்ஸ், பாபிலோன் - Justin Hurwitz, Babylon.
- சிறந்த பாடல் - நாட்டு நாட்டு, ஆர்.ஆர்.ஆர்.
தொலைக்காட்சி விருதுகள்
- சிறந்த சீரிஸ் (நாடகம்) - ஹவுஸ் ஆஃப் தி டிராகன் - House of the Dragon
- சிறந்த சீரிஸ் (இசை/காமெடி) - அபோட் எலிமெண்டரி - Abbott Elementary
- சிறந்த லிமிடெட் சீரிஸ் அல்லது ஆந்தாலஜி தொடர் அல்லது டிவி திரைப்படம் - தி ஒயிட் லோட்டஸ் - The White Lotus
- சிறந்த நடிகை (ட்ராமா) - ஜெண்டயா (Zendaya) யூஃபோரியா 2.
- சிறந்த நடிகர் (ட்ராமா) - கெவின் காஸ்ட்னர் (Kevin Costner), யெல்லோஸ்டோன்
- சிறந்த நடிகை (இசை/காமெடி) - குயின்டா பிரன்சன் (Quinta Brunson), அபோட் எலிமெண்டரி
- சிறந்த நடிகர் (இசை/காமெடி) - ஜெர்மி ஆலன் ஒயிட் (Jeremy Allen White), த பியர்
- சிறந்த நடிகை (சிறந்த லிமிடெட் சீரிஸ் அல்லது ஆந்தாலஜி தொடர் அல்லது டிவி திரைப்படம்) - அமண்டா செஃப்ரைட் (Amanda Seyfried), த டிராப்அவுட்
- சிறந்த நடிகர் (லிமிடெட்/ ஆந்தாலஜி தொடர் அல்லது டிவி திரைப்படம்) - இவான் பீட்டர்ஸ் (Evan Peters), தாஹ்மர் - மான்ஸ்டர்: தி ஜெஃப்ரி தாஹ்மர் கதை
- சிறந்த துணை நடிகை (ட்ராமா அல்லது இசை/நகைச்சுவை) - ஜூலியா கார்னர் (Julia Garner), ஓசர்க்
- சிறந்த துணை நடிகர் (ட்ராமா அல்லது இசை/நகைச்சுவை) - டைலர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் (Tyler James Williams), அபோட் எலிமெண்டரி
- சிறந்த துணை நடிகை (சிறந்த லிமிடெட் சீரிஸ் அல்லது ஆந்தாலஜி தொடர் அல்லது டிவி திரைப்படம்) - ஜெனிபர் கூலிட்ஜ் (Jennifer Coolidge) த ஒய்ட் லோட்டஸ்
- சிறந்த துணை நடிகர் (சிறந்த லிமிடெட் சீரிஸ் அல்லது ஆந்தாலஜி தொடர் அல்லது டிவி திரைப்படம்) - பால் வால்டர் ஹவுசர் (Paul Walter Hauser) , பிளாக் பேர்ட்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion