GOAT Box Office Collection: இரண்டாவது நாள் வசூலில் சறுக்கிய தி கோட்? நிலவரம் என்ன? விஜயின் வீக் எண்ட் வேட்டை ஸ்டார்ட்
GOAT Box Office Day 2 Collecton: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள தி கோட் திரைப்படம், இரண்டாவது நாளில் இந்தியாவ்ல் மட்டும் 25 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்துள்ளது.
GOAT Box Office Day 2 Collecton: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள தி கோட் திரைப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமோக வரவேற்பு பெற்ற ”தி கோட்”
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம் தி கோட். பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. டிக்கெட் முன்பதிவிலேயே பெரும் சாதனை படைத்த இப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று, தி கோட் படத்தின் வசூல் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
தி கோட் - இரண்டாவது நாள் வசூல் நிலவரம்:
நேற்று விடுமுறை ஏதும் இல்லாத வழக்கமான நாள் என்பதால், தி கோட் படத்தின் வசூல் முதல் நாளை காட்டிலும் பாதியாக குறைந்துள்ளது. Sacnilk இணையதள தரவுகளின்படி, இரண்டாவது நாளில் தி கோட் திரைப்படம் இந்தியாவில் மட்டும், 24.75 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. அதில் தமிழ் வெர்ஷன் மூலமாக 22 கோடி ரூபாயும், தெலுங்கு வெர்ஷனில் 1.25 கோடி ரூபாயும், வடமாநிலங்களில் 1.5 கோடி ரூபாயும் அடங்கும். இரண்டு நாட்களில் சேர்த்து மொத்தமாக தமிழ் வெர்ஷன் 61.15 கோடி ரூபாயும், தெலுங்கு வெர்ஷன் 4.25 கோடி ரூபாயும், வடமாநிலங்களில் 3.35 கோட் ரூபாய் என மொத்தமாக 68.75 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச வசூலை சேர்த்தால், விடுமுறை அல்லாத நேற்றும் தி கோட் திரைப்படம் சுமார் ரூ.40 கோடிக்கும் அதிகமாவ்க வசூலித்து இருக்கும் என கணிக்கப்படுகிறது.
சூடுபிடுக்குமா ”தி கோட்” வசூல் வேட்டை
தி கோட் திரைப்படம் வழக்கமான விடுமுறை அல்லாத நாளில் தான் வெளியானது. முதல் இரண்டு நாட்களும், விஜய் ரசிகர்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்து இருந்தனர். இதனால், தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்த வசூல் அவர்களுக்கு கிட்டியது. அடுத்த இரண்டு நாட்கள் பொதுவிடுமுறை என்பதால், குடும்பமாக திரைப்படங்களுக்கு செல்பவர்கள், பொதுவான திரைப்பட ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தி கோட் படத்தின் வசூல் பெரும் ஏற்றத்தை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, வார இறுதிக்குள்ளாகவே தி கோட் திரைப்படம் இந்திய சந்தையில் ரூ.100 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழு நேர அரசியலுக்கு முன்பாக விஜய் நடிக்கும் இரண்டாவது கடைசி திரைப்படம், டி-ஏஜிங் தொழில்நுட்பம், விஜயின் இரட்டை வேட நடிப்பு, பிரமாண்ட தயாரிப்பு, விஜயகாந்தில் ஏஐ சிறப்பு தோற்றம் மற்றும் எதிர்பாராத கேமியோக்கள் என பல்வேறு அம்சங்கள் இப்படத்தை காண தூண்டுகின்றன.