![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Vijay GOAT 2nd Look: புத்தாண்டுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்! G.O.A.T. படத்தின் 2வது போஸ்டர் - குஷியல் ரசிகர்கள்!
வெங்கட் பிரபு இயக்கும் நடிகர் விஜய்யின் 68வது படத்தின் 2வது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
![Vijay GOAT 2nd Look: புத்தாண்டுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்! G.O.A.T. படத்தின் 2வது போஸ்டர் - குஷியல் ரசிகர்கள்! GOAT 2nd Look Thalapathy 68 Update Vijay Venkat Prabhu The Greatest of All Time Movie Second Look Check New Poster Vijay GOAT 2nd Look: புத்தாண்டுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்! G.O.A.T. படத்தின் 2வது போஸ்டர் - குஷியல் ரசிகர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/01/a66dbb2310a4f84bf376dd5620f64b8d1704113256446572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
GOAT Update : வெங்கட் பிரபு இயக்கும் நடிகர் விஜய்யின் 68வது படத்தின் 2வது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
GOAT படம்:
லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. விஜய் ரசிகர்கள் லியோ படத்தை திருவிழாவாக கொண்டாடி ரசித்தனர். லியோ படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.600 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்தது.
லியோ படம் உருவாகி வந்த போது விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது. அதில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்தில் விஜய் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பெயரிடப்படாமல் தளபதி 68 என அழைக்கப்படும் படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்து வருகின்றனர்.
அடுத்தடுத்து அப்டேட்:
படத்தை கல்பாத்தி அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்திற்கு சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது தளபதி 68 படத்தின் ஷூட்டிங் இலங்கையில் வேகமாக நடந்து வருகிறது. சென்னை, தாய்லாந்து, துருக்கி, ஐதரபாத் உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
— Vijay (@actorvijay) January 1, 2024
இந்த படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், படத்தில் இரட்டை வேடத்திலும் விஜய் நடிப்பதாக தெரிகிறது. நேற்று, தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலுடன் விஜய் டபுள் ஆக்ஷனில் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தளபதி 68 படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தர உள்ளார். இந்த நிலையில், தற்போது GOAT படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இரட்டை வேடத்தில் இருக்கும் விஜய், பைக்கில் அமர்ந்திருப்பது போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)