மேலும் அறிய

Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் ரிலீஸ்.. இனிமேல் தான் இருக்கு கதையே.. கௌதம் ட்வீட்!

இறுதியாக அந்த இருண்ட சுரங்கப்பாதையின் மறுமுனையில் வெளிச்சம் தென்பட்டுள்ளது. துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவதற்கு வழிவகுக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரம் படம் வெளியாவதை சிலர் தடுக்க முயன்றதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான படம் “துருவ நட்சத்திரம்”.  காதல் மற்றும் ஆக்‌ஷன் படங்களை இயக்கி வெற்றி கண்ட கௌதம் மேனன் இந்த படத்தை கடந்த 2017ம் ஆண்டு தொடங்கினார். 

முதலில் சூர்யா நடிக்கவிருந்து இதில் விலக ஹீரோவாக விக்ரம் உள்ளே வந்தார். அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா,பார்த்திபன், சிம்ரன், ப்ரித்விராஜ் சுகுமாறன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் இணைந்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்பை திரில்லர் பாணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் டீசர் 2018ம் ஆண்டு வெளியானது. 

கொரோனா ஊரடங்கிற்குப் பின் துருவ நட்சத்திரம் படம் எந்தவித அப்டேட்டும் இல்லாமல் போனது. இதற்கிடையில் கௌதம் வாசுதேவ் மேனன் பல படங்களில் நடிக்கச் சென்றார். தனக்கு கடன் இருப்பதால் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார். பார்க்கும் அத்தனை படங்களிலும் அவர் இருந்தால் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் வருத்தமடைந்தனர். அதேசமயம் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.2023ம் ஆண்டு முதல் அவ்வப்போது துருவ நட்சத்திரம் பற்றி அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடைசி நேரத்தில் படம் வெளியாகாமல் போவதும் வாடிக்கையாக இருந்தது. 

இப்படியான நிலையில் பைனான்ஸ் பிரச்னையால் சிக்கியுள்ள துருவ நட்சத்திரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதனை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15க்கு முன் வெளியிட வேண்டும் என உத்தரவை பிறப்பித்தார். இதனால் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “சிலர் எனது திரைப்பணியை அழிக்கவும், நூற்றுக்கும் மேற்பட்டோரின் உழைப்பால் உருவான எனது திரைப்படம் வெளியாவதைத் தடுக்கவும் முயன்றனர்.
ஆனால் எனது சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் அப்துல் ஹமீது எனக்கு ஒரு தீர்வு உண்டு என்று உறுதியளித்து, என்னை அந்தப் பாதையில் வழிநடத்திச் சென்றார்.

இப்போது, ​​மிக முக்கியமான ஒருவரான நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி எனக்கான பாதையை அமைத்துத் தந்துள்ளார்; இதன் மூலம், இறுதியாக அந்த இருண்ட சுரங்கப்பாதையின் மறுமுனையில் வெளிச்சம் தென்பட்டுள்ளது. 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாவதற்கு வழிவகுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்ற உத்தரவு, முறையான மற்றும் கட்டமைக்கப்பட்ட நிதி நிர்வாகம் அரிதாகவே பின்பற்றப்படும் இத்துறையில், சிக்கலில் சிக்கும் எத்தகைய திரைப்படங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழும்.  இங்கிருந்து, இனி எமது பயணம் மேன்மையை நோக்கியே அமையும்” என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget