மேலும் அறிய

RJ Balaji: ஆர்ஜே பாலாஜியை அப்செட்டாக்கிய ராஜமெளலி! நடந்தது என்ன?

பிரபல இயக்குனர் ராஜமெளலியால் ஆர்ஜே பாலாஜி அதிருப்தி அடைந்த சம்பவம் ஒரு முறை அரங்கேறியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ஆர்ஜே பாலாஜி. இவர் நடிகராக மட்டுமின்றி தொகுப்பாளர், இயக்குனர், வர்ணனையாளர் என பன்முகத் திறன் கொண்டவர். இவரது இயக்கத்தில் விரைவில் கருப்பு திரைப்படம் வெளியாக உள்ளது. ஆர்ஜே பாலாஜியை இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் ராஜமெளலி அதிருப்தி செய்த சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக, ஆர்ஜே பாலாஜி ஒரு முறை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 

பாகுபலி படத்திற்கு அழைப்பு:

பாகுபலி முதல் பாகம் வரும்போது மதன் கார்க்கி அந்த படத்திற்கு தமிழில் வசனம் எழுதினார். எனக்கு அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. ராஜமெளலி சார் என்னுடைய குரல் அந்த படத்திற்கு வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.

நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கோதாச்சாரி படத்தில் நடித்தவருக்கு குரல் கொடுக்க அழைத்தனர். ராஜமெளலி படத்திற்கு குரல் கொடுக்கிறோம் என்று இருந்தேன். 

வேண்டாம் என்றது ஏன்?

இரண்டு நாளில் அவரே திரும்ப அழைத்து வேண்டாம் என்று கூறிவிட்டனர். உங்கள் குரல் மிகவும் பிரபலம். நீங்கள் பேசும்போதே இது ஆர்ஜே பாலாஜி குரல் என்று கண்டுபிடித்துவிடுவார்கள். இது படத்தை திசை திருப்பும். எனக்கு அது அதிருப்தியாக இருந்தாலும் அவர்கள் சொன்னது சரியான விஷயம். இதையடுத்து, அவர்கள் இந்த படத்தின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அழைப்பு விடுத்தனர். ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் வந்தால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வரும். 

இவ்வாறு அவர் கூறினார்.

கருப்பு ரிலீஸ்:

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த நடிகர் சூர்யாவின் கருப்பு படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகிறது. எதிர்நீச்சல் படத்தில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஆர்ஜே பாலாஜிக்கு எல்கேஜி படம் நல்ல திருப்பு முனையாக அமைந்தது. பின்னர், மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி தனது திரையுலகின் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.  தற்போது சூர்யாவை வைத்த இவர் இயக்கியுள்ள கருப்பு படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி சுப்பிரமணியன், சுவாசிகா, ஷிவாடா, சுப்ரீத் ரெட்டி, யோகிபாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜிகே விஷ்ணு, கிரண் கெளஷிக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். எஸ்ஆர் பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

ரெட்ரோ படத்திற்கு பிறகு ஓராண்டுக்கு பிறகு வெளியாகும் படம் கருப்பு. சூர்யாவிற்கு கடந்த சில படங்கள் தோல்விப்படமாக அமைந்துள்ள நிலையில், இந்த படம் வெற்றிப்படமாக அமையுமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

TVK Vijay: 'பொது அறிவு இருக்காது’ - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget