கட்டாகுஸ்தி செட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்: குஸ்தி வீரனாக மாஸ் காட்டிய விஷ்ணு விஷால்
தனது பிறந்தநாளில் தன் நடிப்பில் வெளிவரவுள்ள படங்களின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு மாஸ் காட்டினார் நடிகர் விஷ்ணு விஷால்.
தனது பிறந்தநாளில் தன் நடிப்பில் வெளிவரவுள்ள படங்களின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு மாஸ் காட்டினார் நடிகர் விஷ்ணு விஷால். அதிலும் கட்டாகுஸ்தி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். விஷ்ணு விஷாலுக்கு 38 வயதாகிறது.
தமிழ்த் திரையுலகின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர், விஷ்ணு விஷால். முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது எப்.ஐ.ஆர். உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். நடிகர் நட்ராஜின் மகளான ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், இவருக்கும், ரஜினி நட்ராஜிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்றனர்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை விஷ்ணு விஷால் சில வருடங்களுக்கு முன்பு சந்தித்துள்ளார். முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் பின்னர் காதலிக்கத் தொடங்கினர். இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். முன்னாள் பேட்மிண்டன் வீரர் சேத்தன் ஆனந்தை திருமணம் செய்து வாழ்ந்துவந்த ஜூவாலா கட்டா, கடந்த 2011-ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pictures from @TheVishnuVishal's birthday celebrations on the sets of #GattaKusthi #MattiKusthi 🎂
— Tamil2daynews (@tamil2daynews) July 18, 2022
Catch the #GlimpseOfVeera now.
Tamil - https://t.co/2SieXxS6lQ
Telugu - https://t.co/MTEys42WPS@VVStudioz @RTTeamWorks @RaviTeja_offl @teamaimpr @decoffl pic.twitter.com/olHSuhAD6e
மோகன்ஸ்தாஸ்.. சைக்கோ த்ரில்லர் ஜானர்:
ராட்சசன் திரைப்படம் போன்று ஆக்ஷன் திரில்லர் படமாக வெளியாக உள்ள மோகன்தாஸ் படத்தின் கிளம்ப்ஸ் காட்சியில் விஷ்ணுவிஷால் சைக்கோ கொலைக்காரனாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள மோகன்தாஸ் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். படத்தின் கிளிம்ப்ஸ் காட்சியில் ஹாப்பி பர்த்டே மீ என்ற வசனத்துடன் சுத்தியலால் சிலரை விஷ்ணுவிஷால் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. மோகன்தாஸ் படத்தை முரளிகார்த்திக் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
Happy birthday to me..
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) July 17, 2022
Happy birthday to me..#MohandasGlimpse is here 🔨
Cheers mate 🥃
pic.twitter.com/jAPsxjOSZx
மல்யுத்த வீரராக கட்டாகுஸ்தி:
அதேபோல், கட்டாகுஸ்தி திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சியும் அவர் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது. கட்டாகுஸ்தி படத்தில் விஷ்ணுவிஷால் குஸ்தி வீரராக அதாவது மல்யுத்த வீரராக நடித்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த படம் தெலுங்கிலும் உருவாகியுள்ளது. கட்டா குஸ்தி திரைப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிறப்புத்தோற்றத்தில் ரவிதேஜா நடித்துள்ளார்.
Here's a #GlimpseOfVeera for you ❤️
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) July 17, 2022
Back to the family entertainer space with #GattaKusthi..
More updates soon!
pic.twitter.com/piDMEL2iZF