Gargi Trailer: ஏன்னா நான் பையன் இல்ல.. பொண்ணுதானே..? நீதிக்கு போராடும் சாய் பல்லவி... வெளியான கார்கி ட்ரெய்லர்!
கார்கி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
![Gargi Trailer: ஏன்னா நான் பையன் இல்ல.. பொண்ணுதானே..? நீதிக்கு போராடும் சாய் பல்லவி... வெளியான கார்கி ட்ரெய்லர்! Gargi Trailer Released Suriya Jyothika Production Sai Pallavi Starring Gargi Trailer Out Gargi Trailer: ஏன்னா நான் பையன் இல்ல.. பொண்ணுதானே..? நீதிக்கு போராடும் சாய் பல்லவி... வெளியான கார்கி ட்ரெய்லர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/3b5c4ec5990abc7cf342a1050bf2c0d41657199961_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை சாய் பல்லவியின் அடுத்த திரைப்படமான கார்கி வருகிற ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை சாய் பல்லவி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் பேனரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்தநிலையில், கார்கி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவர், ஒட்டுமொத்த சமூகத்திற்கு எதிராக தனது தந்தைக்காக போராடும் கதை. இதனால் தனக்கு நேர்ந்த அவமானங்கள், சோகங்களை கடந்து எப்படி அவற்றில் இருந்து வெற்றி பெறுகிறார் என்பதை இந்த கதை ஆழமாக சொல்ல இருக்கிறது.
முன்னதாக, படக்குழுவினர் ஒரு டீஸரைப் பகிர்ந்து கொண்டனர். அதில் சாய் பல்லவி நீதிக்காக போராடும் ஒரு பெண்ணை பற்றிய கதை என்றும், ஒரு பெண்ணாக தன் மேம்பாட்டிற்காகவும், அதிகாரம் பெறுவதற்காகவும் அவள் போராடுகிறார் என்றும் கூறப்படுகிறது.
சாய் பல்லவி நடிக்கும் கார்கி படத்தின் ஸ்டில்ஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
View this post on Instagram
சாய் பல்லவி :
“பிரேமம்” (மலையாளம்), “ஃபிடா” (தெலுங்கு) மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆன்தாலஜி “பாவ கதைகள்” (தமிழ்) ஆகியவற்றால் இந்திய சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தார். நடன கலைஞராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் திரைப்படம் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய பிரேக்காக இருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து களி, தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார். அண்மையில் இவர் மற்றும் ராணா இணைந்து நடித்து வெளியான விராட பர்வம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)