சிவகார்த்திகேயனோடு மோதும் பாலா?.. துணிச்சலான முடிவா?.. அந்தர் பல்டி அடித்த நடிகர்
மதராஸி படத்திற்கு போட்டியாக KPY பாலா நடித்திருக்கும் படமும் ரிலீஸ் ஆவதால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாலா. அதனோடு பிறருக்கு உதவி செய்வதில் வள்ளலாக திகழ்கிறார். கேட்டவருக்கும் அள்ளி கொடுக்கும் கர்ணனாக பலராலும் போற்றப்படுகிறார். தனது தனிப்பட்ட பண்புகளே அவரது வளர்ச்சிக்கு காரணம் என எல்லோரும் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் நடிகர் லாரன்ஸ் பாலாவை வைத்து படம் தயாரிக்கிறேன் என தெரிவித்தார்.
மதராஸியோடு காந்தி கண்ணாடி மோதலா?
அவர் சொன்ன வாக்கும் பலித்தது. தற்போது பாலா ஹீரோவாக காந்தி கண்ணாடி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகை அர்ச்சுணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரணம் படத்தை இயக்கிய ஷெரீப் இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படம் வெளியாகும் நாளில் இப்படம் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனை எதிர்க்கும் பாலா?
இந்நிலையில், காந்தி கண்ணாடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் பாலா, நான் காமெடியனாக பல படங்களில் நடித்தேன். ஆனால், அந்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. தற்போது நான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். 50 ஹீரோயின்கள் என்னுடன் ஜோடி சேர்ந்து நடிக்க மறுப்பு தெரிவித்தார்கள். அண்ணன் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராஸி படத்தோடு காந்தி கண்ணாடி மோதுவது துணிச்சலான முடிவா என பலரும் கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை.
சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படமும் வெற்றிப்பெறும், அப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காவிட்டால் என்ப படத்திற்கு ரசிகர்கள் வரும் போது இப்படமும் வெற்றி பெறும். யாரும் சிவகார்த்திகேயன் அண்ணனோடு என்னை ஒப்பிட வேண்டாம் என பாலா கேட்டுக்கொண்டார்.





















