பென்ஸ் படத்தில் பராசக்தி பட ஹீரோ.. என்ன மாதிரி ரோல் தெரியுமா.. அடக்கி வாசிக்கும் லோகேஷ்!
பென்ஸ் படத்தில் பராசக்தி பட நடிகர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குநர்களின் படங்களை தயாரிப்பதும் மட்டும் அல்லாமல் இயக்குநர்களின் படங்களுக்கு கதை எழுதியும் வருகிறார். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்திற்கு இவரே கதை எழுதியுள்ளார். இப்படத்தை ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் எல்சியு-விலும் இடம்பெறும் என முன்னதாகவே தகவல் வெளியானது.
இப்படம் குறித்த அறிவிப்பு வந்த போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடிகர் நிவின் பாலியின் கதாப்பாத்திரத்தின் பெயரை டைட்டீல் டீசரோடு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் நிவின் பாலி, மாதவன் ஆகியோர் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. அனிருத்தை போன்று கமர்ஷியல் பேக்கஜோடு துள்ளலான இசையை தருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பென்ஸ் படத்தின் கதை சீரியல் கில்லர் கதாப்பாத்திரத்தோடு ஓப்பிடுவது போன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரவி மோகனும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் 2, கைதி 2 படத்திலும் ரவி மோகன் இடம்பெறுவார் என்றும் எல்சியுவை குறிப்பிடும் முக்கிய ரோல் என்றும் கூறப்படுகிறது. சமீபகாலமாக ரவி மோகன் நடிக்கும் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகிறது. அதனால், கதைக்கேற்ற ரோலில் நடிக்க ரவி மோகன் சம்மதம் தெரிவித்து வருகிறார். ஒரு பக்கம் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொள்ள இதுபோன்ற படங்களில் நடிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















