கயடுவை கட்டிப்பிடித்த ஜிவி பிரகாஷ்..கடுப்பான கயடு ரசிகர்கள்
Immortal Movie Teaser : ஜிவி பிரகாஷ் கயடு லோஹர் இணைந்து நடித்துள்ள இம்மார்டல் திரைப்படம் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது

ரொமாண்டிக் , காமெடி , த்ரில்லர் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். டார்லிங் படத்தைத் தொடர்ந்து மீண்டாம் ஹாரர் காமெடி படமாக இம்மார்டல் படத்தில் நடித்துள்ளார். கயடு லோஹர் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இணையத்தில் நெட்டிசன்களிடயே பேசுபொருளாகியுள்ளது. கயடு லோஹர் மற்றும் ஜிவி இடையேயான காதல் காட்சிகளைப் பார்த்து கயடு லோஹர் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் குமார் தற்போது தனது 100 படமாக பராசக்தி படத்திற்கு இசையமைத்துள்ளார். 2015 இல் வெளியான டார்லிங் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து வேறுபட்ட கதைகளில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு கிங்ஸ்டன் , பிளாக்மெயில் ஆகிய அவரது படங்கள் வெளியாகி பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. அடுத்தபடியாக மெண்டல் மனதில் , அடங்காதே , இடிமுழக்கம் , இம்மார்டல் , 13 , ஆயிரம் ஜென்மங்கள் , காதலிக்க யாருமில்லை , ஹாப்பி ராஜ் ஆகிய படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். இதில் அண்மையில் ஹாப்பி ராஜ் படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இமமார்டல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
இம்மார்டல் டீசர்
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஹாரர் காமெடி , ரொமான்ஸ் கலந்து உருவாகியுள்ள படம் இம்மார்டல். ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர், டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா சாம்சோ, சுனிதா ஸ்ரேஸ்தா இப்படத்தில் நடித்துள்ளார்கள். சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசரில் ஜிவி மற்றும் கயடு லோஹர் இடையிலான காதல் காட்சிகள் நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியுள்ளது
கயடுவை கட்டிப்பிடித்த ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ் படங்கள் என்றாலே அதில் இளைஞர்களை கவரும் விதமாக ரொமான்ஸ் காட்சிகள் நிச்சயம் இருக்கும் எனலாம். த்ரிஷா இல்லனா நயன்தாரா , டார்லிங் , பேச்சுலர் ஆகிய படங்களை உதாரணமாக சொல்லலாம். டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர் நடிகை கயடு லோஹர் . இம்மர்டல் படத்தின் டீசரில் அவருக்கு ஜிவி பிரகாஷூக்கும் இடையிலான நெருக்கமான காதல் காட்சிகள் கயடு லோஹர் ரசிகர்களையே பேசுபொருளாகியுள்ளது. பலரும் ஜிவி பிரகாஷை தங்கள் காதலை கெடுக்க வந்த எதிரியை திட்டுவது திட்டி விமர்சித்து வருகிறார்கள்.





















