National Film Awards: ”தமிழன்டா எந்நாளும்”கையில் தேசிய விருது.. வேஷ்டியில் மேடை ஏறிய ஜி.வி.பிரகாஷ்!
National Film Awards: தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து ஜி.வி.பிரகாஷ் தேசிய விருதினை வாங்கியது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

வாத்தி திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இன்று (செப்டம்பர் 23) தேசிய விருதினை வழங்கினார் இந்திய குடியரசுத்தலைவார் திரௌபதி . அப்போது ஜி.வி பிராகாஷ் தமிழர்களின் பாரப்பரிய உடையான வேஷ்டி அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்:
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிப்படுத்தி வருபவர் ஜி.வி. பிரகாஷ். கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதன மூலம் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துள்ளார். அதேபோல், 100 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். இச்சூழலில் தான் அவருக்கு அண்மையில் இந்திய அரசு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை அறிவித்தது. அதன்படி, வாத்தி திரைப்படத்திற்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.
வேஷ்டியில் மாஸ்:
Thank you all ❤️ grateful . 71st national awards . Best music director ❤️ thank you all pic.twitter.com/yZGYPI6b5x
— G.V.Prakash Kumar (@gvprakash) September 23, 2025
இந்த நிலையில் தான் இன்று டெல்லியில் 71 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளார் ஜி.பி.பிரகாஷுக்கு இந்திய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தேசிய விருதை வழங்கினார். அப்போது ஜி.பி. பிரகாஷ் தமிழர்களின் பாரப்பரிய உடையான வேஷ்டி அணிந்து மேடை ஏறினார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது. விருது வாங்கியது தொடர்பாக ஜி.பி.பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவில், "நன்றி ❤️ நன்றியுடன் . இரண்டாவது முறையாக"என்று கூறியுள்ளார்.





















