Flashback : அதிக விலை கேட்ட கே பாலச்சந்தர்.. குருவுடன் மோதிய ரஜினி..அப்புறம் என்ன ?
ரஜினியின் முத்து படத்தை இயக்குநர் கே பாலச்சந்தர் தயாரித்தார். இந்த படத்தின் ரிலீஸை வைத்து ரஜினி மற்றும் கே பாலச்சந்தர் இடையே மோதல் ஏற்பட்டது

கே.எஸ் ரவிகுமார் நடித்து 1995 ஆம் ஆண்டு முத்து படம் வெளியானது. ரஜினியின் குருவான கே பாலச்சந்தர் இந்த படத்தை தயாரித்தார். இந்த படத்தின் விநியோகம் குறித்து ரஜினி மற்றும் கே பாலச்சந்தர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரபல இயக்குநர் ஒருவர் கொடுத்த ஐடியாவால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது
கே பாலச்சந்தர் தயாரிப்பில் ரஜினி நடித்த முத்து
ரஜினிகாந்தை அறிமுகம் செய்தது இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் என்றாலும் கூட அவரது தயாரிப்பில், நடித்த முத்து படத்தின் ரிலீஸில் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. 1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த அவர், ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன், முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான படம் ‘தென்மாவின் கொம்பேத் படத்தின் ரீமேக்தான் முத்து.
மோகன்லால், நெடுமுடி வேணு, ஷோபனா ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். மலையாளத்தில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த படத்தை தமிழில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயே கேட்ட குரல் உள்ளிட்ட அவரின் மகளாக நடித்திருந்த நடிகை மீனா நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையேயான மோதல், காதல், ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ரஜினி கே பாலச்சந்தர் மோதல்
இந்த படத்திற்கு முன்னதாக ரஜினிக்கு வீரா மற்றும் பாட்ஷா என இரு வெற்றிப்படங்கள் இருந்தது. இதனால் முத்து படத்தை அதிக விலைக்கு விற்க வேண்டும் என்று கே.பாலச்சந்தர் முடிவு செய்துள்ளார். ஆனால் இது ரஜினிகாந்துக்கு பிடிக்கவில்லை. படம் லாபம் இருக்க வேண்டும். ஆனாலும் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்பட கூடாது என்று நினைத்த ரஜினிகாந்த் கே.பாலச்சந்தரிடம் இது பற்றி கேட்க இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அப்போது பஞ்சு அருணாச்சலம், இயக்குனர் கேயார் ஆகியோர் ஒரு ஐடியா கொடுத்துள்ளனர்.
நீங்களே டிஸ்டிபியூஷன் இல்லாமல் நேரடியாக படத்தை திரையரங்குகளில் வெளியிடுங்கள். பாட்ஷா, வீரா ஆகிய இரு படங்களின் வசூலை விட ஒரு லட்சம் அதிகமாக வைத்து வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி செய்த, கே.பாலச்சந்தர் பெரிய லாபத்தை பெற்றுள்ளார். அவர் எதிர்பார்த்தது ரூ25 லட்சம் லாபம் தான். ஆனால் கோயார் சொன்ன முறையில் ரிலீஸ் செய்ததால், ரூ3 கோடிவரை லாபம் வந்துள்ளது. முத்து படம் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக இன்றும் நிலைத்திருக்கிறது. இந்த தகவலை தயாரிப்பாளர் கேயார் கூறியுள்ளார்.





















