Film Maker Naveen: சாமானியப் பெண்கள் குடிப்பதால் சமூகக்கேடா? மூடர்கூடம் இயக்குநர் என்ன சொன்னார்?
இணையதளத்தில் பெண்கள் மது வாங்கும் வீடியோ டிரெண்ட் ஆனதைத் தொடர்ந்து இணையதளத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு மூடர்கூடம் படத்தின் இயக்குநர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்
மூன்று பெண்கள் மதுக்கடையில் மது வாங்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை முன்னிறுத்தி இணையதளத்தில் பலவிதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த வீடியோவை பகிர்ந்த நடிகை கஸ்தூரியை விமர்சித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார் மூடக்கூடம் படத்தின் இயக்குநர் இயக்குநர் நவீன்.
பெண்கள் மது அருந்தகூடாதா?
இணையதளத்தில் இன்று வைரலாகி வரும் வீடியோவில் ஒன்று இரண்டு பெண்கள் ஒரு மதுக்கடைக்கு சென்று மது வாங்குகிறார்கள். இதை வீடியோ எடுத்தவர்கள் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
பெண்கள் இப்படியான காரியத்தை செய்யலாமா…இதுவா பெண் விடுதலை என்கிற வகையிலான கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் அரசுத்தரப்பில் இருந்து பெண்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை இத்துடன் இணைத்து விமர்சித்து வருகிறார்கள். தற்போது நடிகை கஸ்தூரி இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தண்ணியடி பெண்ணே தண்ணியடி என்று நக்கலான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த நவீன் அவருக்கு பதில் அளித்துள்ளார்.
தண்ணியடி, பெண்ணே தண்ணியடி !
— Kasturi (@KasthuriShankar) July 13, 2023
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று தண்ணியடி.
WhatsApp fwd of the day. As received.
Super. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும் 🫤#dravidamodel pic.twitter.com/7SA889fwpp
மூடர்கூடம் நவீன் கருத்து
மூடர் கூடம் படத்தின் மூல இயக்குநராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தைப் பெற்றவர் இயக்குநர் நவீன். அரசியல் நிகழ்வுகளில் நேர்மையான தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருபவர்.
தற்போது இந்த விஷயத்தில் சற்று சற்று கடுமையாகவே தனது கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ”பணக்கார மேல்தட்டு பெண்கள் மது அருந்துவதை நீங்கள் பார்த்ததே இல்லையா? அப்போதெல்லாம் கெடாத சமூகம் சாமான்ய பெண்கள் சரக்கடிக்கும்போதுதான் கெடுமா? மது மனிதனின் உடல்நலத்திற்கு கேடு. ஆதிக்க உணர்வு சமூகத்திற்கே கேடு. பெண்ணாக இருந்துகொண்டு திராவிடியா என்று சொல்வதை நிறுத்துங்கள். Wise up” என்று அவர் பதிவிட்டுள்ளார். நவீனின் இந்தக் கருத்துக்களுக்கு ஆதரவும் விமர்சனமும் வந்தபடி இருக்கின்றன.
பணக்கார மேல்தட்டு பெண்கள் மது அருந்துவதை நீங்கள் பார்த்ததே இல்லையா? அப்போதெல்லாம் கெடாத சமூகம் சாமான்ய பெண்கள் சரக்கடிக்கும்போதுதான் கெடுமா? மது மனிதனின் உடல்நலத்திற்கு கேடு. ஆதிக்க உணர்வு சமூகத்திற்கே கேடு. பெண்னாக இருந்துகொண்டு திராவிடியா என்று சொல்வதை நிறுத்துங்கள். Wise up🙏🏿 https://t.co/038kEWYRwY
— NaveenHidayatAli (@NaveenFilmmaker) July 14, 2023