நீங்களுமா லோகேஷ்...எங்களுக்கு வருத்தம்பா...கூலி பட அப்டேட்டால் கடுப்பான ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்

கூலி
ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறர் . சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் , உபேந்திரா , சத்யராஜ் , செளபின் சாஹிர், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். கூலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களை பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்ட நிலையில் இன்று கூலி படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டது. பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என இன்று அப்டேட் வெளியாகியது. இந்த தகவல் ஒரு பக்கம் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் லோகேஷ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்
லோகேஷ் மீது ரசிகர்கள் அதிருப்தி
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கமர்சியல் தமிழ் சினிமாவில் சில புதுமையான விஷயங்களை கொண்டு வந்தார். ஒரு இரவில் கதை சொல்வது , மல்டி காஸ்டிங் , வழக்கமான மசாலா பாடல்கள் இல்லாமல் படம் பண்ணுவது என தன்னை தனித்துவமானவராக காட்டினார் லோகேஷ். மாநகரம் படத்தின் மொத்த கதையும் ஒரு இரவில் நடப்பது அதுமட்டிமில்லாமல் இந்த மொத்த படத்திலும் ஒருவரின் பெயர் கூட சொல்லியிருக்க மாட்டார்கள். அதேபோல் கைதி திரைப்படமும் ஒரு இரவில் நடக்கும் கதை. மாஸ்டர் படத்தில் விஜயை முற்றிலும் புதிய சாயலில் காட்டியதற்கு லோகேஷை பலர் பாராட்டினார்.
தயாரிபபளர்களின் நிபந்தைகளுக்கு ஒரு கிரியேட்டர் உடன்பட முடியாது அது அவனது சுதந்திரத்தை பறிப்பது என லோகேஷ் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். ஆனால் தற்போது கூலி படத்தில் மசாலா பாடல் ஒன்றை வைத்து அதில் முன்னணி நடிகை ஒருவரையும் அவர் நடிக்க வைத்துள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்த காவாலா பாடல் பெரியளவில் ஹிட் அடித்த நிலையில் இந்த படத்திலும் அந்த மாதிரியான ஒரு பாடலை சன் பிக்ச்சர்ஸ் வைக்க முடிவு செய்ததாகவும் ஆனால் லோகேஷ் இதற்கு ஏன் நோ சொல்லவில்லை என்றும் ரசிகர்கல் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

