Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
கைதி 2 படத்தை இயக்குவதற்கு ரூபாய் 75 கோடி சம்பளமாக தர லோகேஷ் கனகராஜ் நிபந்தனை விதித்துள்ளதாக தயாரிப்பாளர் பாலாஜிபிரபு குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனராக உலா வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ, கூலி ஆகிய படங்களை இயக்கி முதன்மை இயக்குனராக உள்ளார்.
கைதி 2:
இவரது இயக்கத்தில் கைதி படத்தின் 2ம் பாகம் வெளியீட்டிற்காக ரசிகர்கள் தயாராக உள்ளனர். இந்த படம் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, "கைதி மிகப்பெரிய வெற்றி படம். கைதி 2 லோகேஷ் பண்றதுக்கு கூப்பிட்டபோது, கைதி 2 ஏற்கனேவ அவர் கொடுத்த கமிட்மென்ட். அப்போது அவர் நான் மாஸ்டர் முடித்துவிட்டு வருகிறேன். நான் விக்ரமை முடித்துட்டு வர்றேன். நான் லியோவை முடிச்சுட்டு வர்றேன். கூலியை முடிச்சுட்டு வர்றேனு சொன்னாரு.
75 கோடி ரூபாய் கேட்கும் லோகேஷ்:
கூலியை முடிச்ச பிறகு எப்ப சார் பண்ணப்போறீங்க? இப்படி எல்லா படமும் பெரிய படமாக பண்ணிக்கொண்டே இருந்தால் எங்களுக்கு எப்போது பண்ணப்போகிறீர்கள்? என்று கேட்டாங்க. பெரிய அட்வான்ஸ் கொடுத்து இருக்காங்க. அந்த பேனர்தான் ( தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு) தான் லோகேஷ் கனகராஜ்க்கு அறிமுகமே கொடுத்துள்ளனர்.
ஒரு ஹீரோ முதல்ல லோகேஷ் கனகராஜை நம்பி தேதி கொடுத்தார் என்றால் அது கார்த்திதான் கொடுத்தார். இது எல்லாத்துக்கும் லோகேஷ் கனகராஜ் ஒரு மரியாதையும், மதிப்பும் கொடுப்பாரு என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது எதுவுமே நடக்கவில்லை. லோகேஷ் கனகராஜ் அந்த கம்பெனியில் போயி 75 கோடி ரூபாய் வேணும் என்று கேட்கிறார்.
தப்பு:
இவருக்கு பேனர் கொடுத்த கம்பெனி ரஜினியையும், கமலையும் வைத்து எடுத்தால் நீங்க கேட்கலாம். எடுக்கப்போற ஆர்டிஸ்ட் கார்த்தி. கார்த்தி நல்ல நடிகர்தான் அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், கார்த்திக்கிற்கு என்று ஒரு வர்த்தகம் உள்ளது. ரஜினிக்கும், கமலுக்கும் ஆகும் வியாபாரம் கார்த்திக்கிற்கு ஆகுமா? அப்படி இருக்கும்போது அந்த வியாபார எல்லை என்று ஒன்று உள்ளது. அந்த வியாபாரம் தெரியாமல் நீங்கள் 75 கோடி ரூபாய் கொடுங்கள் என்று கேட்பது தப்புதானே. அப்படி கேட்டதால் என்னவாகியது என்றால் அந்த ப்ராஜெக்ட்டும் அப்படியே கிடப்பில் உள்ளது."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கைதி 2 படம் விரைவில் தொடங்கும் என்று கார்த்தியும், லோகேஷ் கனகராஜும் கூறினாலும் அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பிற்கு இதுவரை செல்லவில்லை. மேலும், லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய லியோ, கூலி படங்கள் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. குறிப்பாக, கூலி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறத் தவறியது.
வருமா? வராதா?
இந்த சூழலில், அவர் கதாநாயகனாக நடிக்கவும் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனால், கைதி 2 படம் தயாராகுமா? தாமதம் ஆகுமா? கைவிடப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாநகரம் படம் மற்றும் கைதி படத்தை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார்.





















