மேலும் அறிய

Premji Amaran: காதல் கனவே.. மனைவிக்கு முத்தம்.. திருத்தணியில் சிம்பிளாக நடந்த நடிகர் பிரேம்ஜி திருமணம்..

45 வயதான பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். அவர் எங்கு சென்றாலும் எப்போது கல்யாணம் என்ற கேள்வி தான்  ரசிகர்களிடத்தில் இருந்து எழும். இந்நிலையில் திருத்தணியில் அவர் திருமணம் நடைபெற்றது

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் பிரேம்ஜி அமரன், ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று திருமணம் செய்துக் கொண்டார். 

தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜாவின் சகோதரும், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் வெங்கட்பிரபுவுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ளார். இரண்டவது மகனான பிரேம்ஜியும் அப்பாவைப் போல இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முக திறமையாளராக வலம் வருகிறார். 

Image

இப்படியிருக்கும் நிலையில் 45 வயதான பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். அவர் எங்கு சென்றாலும் எப்போது கல்யாணம் என்ற கேள்வி தான்  ரசிகர்களிடத்தில் இருந்து எழும். இப்படியான நிலையில் ஒருவழியாக பிரேம்ஜி இந்து என்ற பெண்ணை மணமுடித்துள்ளார்.இவர்களது திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் இன்று சிம்பிளாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரேம்ஜி - இந்து குடும்பத்தினர், திரையுலகின் நெருங்கிய நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

முன்னதாக நேற்று பிரேம்ஜி- இந்து தம்பதியினரின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிகழ்ச்சியில் ஜெய், மிர்ச்சி சிவா, வைபவ், ஜெய் ஆகாஷ், அஜய் ராஜ் என பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் திருத்தணி கோயிலில் மனைவிக்கு தாலி கட்டியதும் முத்தத்தை பரிசாக அளித்து சுற்றியிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 45 ஆண்டுகள் வரை திருமணமே வேண்டாம் என்ற பிரேம்ஜிக்குள் இப்படி ஒரு காதல் இருக்கிறதா என அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருத்துகளையும், தங்கள் வாழ்த்துகளையும் பதிவிட்டுள்ளனர். 

வங்கி ஒன்றில் வேலை பார்க்கும் இந்து தான் பிரேம்ஜியிடம் காதலை சொன்னதாகவும், அவரின் விருப்பபடியே திருத்தணி கோயிலில் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் கோலிவுட்டில் மொரட்டு சிங்கிள் ஆக வலம் வந்த பிரேம்ஜி ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டார். இதேபோல் சிம்புவும், விஷாலும் விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?
Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?
Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Happy Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Celebrities Pongal Celebration 2025: பொங்கலோ பொங்கல்! பிரபலங்களின் வீட்டில் பொங்கிய சந்தோஷம்!
Celebrities Pongal Celebration 2025: பொங்கலோ பொங்கல்! பிரபலங்களின் வீட்டில் பொங்கிய சந்தோஷம்!
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?
Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?
Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Happy Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Celebrities Pongal Celebration 2025: பொங்கலோ பொங்கல்! பிரபலங்களின் வீட்டில் பொங்கிய சந்தோஷம்!
Celebrities Pongal Celebration 2025: பொங்கலோ பொங்கல்! பிரபலங்களின் வீட்டில் பொங்கிய சந்தோஷம்!
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
Rangoli Kolam: கோலங்கள்! கோலங்கள்! வாசல் எல்லாம் வண்ண வண்ண ரங்கோலி! மயக்கும் மாட்டுப்பொங்கல்!
Rangoli Kolam: கோலங்கள்! கோலங்கள்! வாசல் எல்லாம் வண்ண வண்ண ரங்கோலி! மயக்கும் மாட்டுப்பொங்கல்!
Ajith - Vijay: தளபதிக்கு
Ajith - Vijay: தளபதிக்கு "தல" கணமா? கடைசி வரை அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்!
Thalapathy 69: இதுதான் தளபதி 69 லுக்கா? இணையத்தை மிரட்டும் விஜய்யின் நியூ கெட்டப்!
Thalapathy 69: இதுதான் தளபதி 69 லுக்கா? இணையத்தை மிரட்டும் விஜய்யின் நியூ கெட்டப்!
CM Stalin: போடு வெடிய - சென்னை சங்கமம், கிராமிய கலைஞர்களுக்கான ஊதியம் ரூ.5,000 ஆக உயர்வு - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: போடு வெடிய - சென்னை சங்கமம், கிராமிய கலைஞர்களுக்கான ஊதியம் ரூ.5,000 ஆக உயர்வு - ஸ்டாலின் அதிரடி
Embed widget