HBD Trisha: 'உயிர் உங்களுடையது தேவி’.. தமிழ் சினிமாவின் பேரழகி த்ரிஷாவின் பிறந்தநாள் இன்று..!
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகை த்ரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகை த்ரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பல மொழிகளைச் சேர்ந்த ஹீரோயின்கள் நடிக்கும் தமிழ் சினிமாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு தமிழ்ப் பெண்கள் நடிகையாக வலம் வருவது மிகவும் குறைவு தான். அப்படியான நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார் என்றால் அது த்ரிஷா தான்.
மாடலிங் - நடிகை
1983 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி சென்னையில் பிறந்த த்ரிஷா சர்ச் பார்க்கில் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், எத்திராஜ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பையும் படித்தார். கல்லூரி காலத்தில் மாடலிங்கில் ஆர்வம் கொண்ட த்ரிஷா 1999 ஆம் ஆண்டும்மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் ப்யூட்டிஃபுல் ஸ்மைல் விருதை தட்டிச் சென்றார்.
நடிகையாக அறிமுகம்
1999ல் வெளியான பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் ஒரு காட்சியில் தலைகாட்டிய த்ரிஷா கடந்த 2002 ஆம் ஆண்டு மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் . ஆனால் பிரியதர்ஷன் இயக்கத்தில் லேசா..லேசா படம் தான் அவர் நடிக்க தொடங்கிய முதல் படமாகும். அதற்குள் மௌனம் பேசியதே படம் வெளியாகி தொலைக்காட்சி, ரேடியோக்களில் ஹிட்டடித்த “என் அன்பே..என் அன்பே..என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி” பாடல் காதலர்களின் கீதமாக ஒலிக்க த்ரிஷா ரசிகர்களை கவர்ந்தார் என்றே சொல்லலாம்.
அடுத்த ஆண்டு (2003) அவரிம் மூன்றாவது படமாக சாமி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் தாக்கம் தமிழ் சினிமா த்ரிஷாவை கொண்டாட தொடங்கியது. விஜய்யுடன் கில்லி த்ரிஷா கேரியல் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற அப்படிப்போடு பாடல் அவரை சிறியவர் முதல் பெரியவர் வரை கொண்டு சேர்த்தது.
இதன் விளைவு கடந்த 21 வருடத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, கார்த்தி, ஜீவா என அனைவரது படங்களிலும் ஹீரோயினாகவே த்ரிஷா நடித்துள்ளார். மேலும் நாயகி, மோகினி, ராங்கி என தனி ஹீரோயின் கேரக்டர்களிலும் அவர் அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் கனவுப்படமாக வெளியான பொன்னியின் செல்வனில் குந்தவை கேரக்டரில் ஜொலித்தார். படத்தில் நடித்த சக நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு நிகராக அழகில் மின்னியதாக ரசிகர்கள் த்ரிஷாவை புகழ்ந்து தள்ளினார்கள்.
மறக்க முடியாத கேரக்டர்கள்
‘மௌனம் பேசியதே’ சந்தியா, ‘கில்லி’ தனலட்சுமி, ‘உனக்கும் எனக்கும்’ கவிதா, ‘அபியும் நானும்’ அபி, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸி, ‘என்னை அறிந்தால்’ ஹேமானிகா, ‘கொடி ’ ருத்ரா, ‘96’ ஜானு, தற்போது பொன்னியின் செல்வன் “குந்தவை” என அனைத்து தமிழ் சினிமாவில் த்ரிஷாவின் பெருமை சொல்லும் கிளாஸிக் கேரக்டர்கள்.
“அப்படிப்போடு.. வா..வா..என் தேவதையே..பூப்பறிக்க நீயும் போகாதே... ஹோசானா... காதலே காதலே தனிப்பெரும் துணையே உள்ளிட்ட பாடல்கள் அவருக்கென செய்த சிலையாக இருக்கும். தமிழ் சினிமாவில் 2000க்குப் பிறகு வந்த கதாநாயகிகளில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகை என்ற புகழுக்கு சொந்தக்காரர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவர் த்ரிஷா . அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து படமெடுத்தால் தான் நடிக்க விரும்புவதாக பேட்டி ஒன்றில் முன்னதாக தெரிவித்திருந்தார். அந்த அன்பின் வெளிப்பாடாகவே இன்றளவும் தனது ட்விட்டர் அக்கவுண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கையால் விருது பெறும் புகைப்படத்தை கவர் போட்டோவாக வைத்துள்ளார்.
கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதையின் நாயகியாக வலம் வரும் த்ரிஷாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!