![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Actor Vinayakan: 10 பெண்களுடன் பாலியல் உறவு.. மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விநாயகன்..
பிரபல மலையாள நடிகர் விநாயகன் தனது மனைவியை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Actor Vinayakan: 10 பெண்களுடன் பாலியல் உறவு.. மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விநாயகன்.. famous malayalam Actor Vinayakan separated from his wife babita Actor Vinayakan: 10 பெண்களுடன் பாலியல் உறவு.. மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விநாயகன்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/e2751e68e0e09ab4f6657df5e54ccbfa1679904233300572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல மலையாள நடிகர் விநாயகன் தனது மனைவியை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் விநாயகன் பிளாக் மெர்குரி என்ற நடனக் குழுவை நடத்தி வந்தார். தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு வெளியான தம்பி கண்ணந்தானம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் பலவிதமான கேரக்டரில் நடித்த விநாயகன் 2016 ஆம் ஆண்டு வெளியான கம்மாட்டி பாடம் படத்திற்காக சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார்.
மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார். விஷால் நடித்த திமிரு படத்தின் எண்ட்ரீ ஆன விநாயகன், தனுஷ் நடித்த மரியான், சிம்பு நடித்த சிலம்பாட்டம், ஆர்.கே. நடித்த எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் விநாயகன் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும், விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார். இதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகன் தமிழுக்கு வருகிறார்.
கடந்தாண்டு மார்ச் மாதம் நடிகை நவ்யா நாயர் நடித்த ஒருத்தி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய அவரின் கருத்து கடும் சர்ச்சைகளை கிளப்பியது. அந்நிகழ்வில் விநாயகனிடம் பெண்கள் வைக்கும் `மீ டூ' குற்றச்சாட்டு பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “தான் வாழ்க்கையில் 10 பெண்களுடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு கொண்டிருக்கிறேன் என்றும், பெண்கள் அனுமதியுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது மீ டூ குற்றத்தில் வராது” என தெரிவித்தார். இந்த பேச்சு பெரும் விமர்சனங்களைப் பெற்றது. இந்த விவகாரம் அவரது குடும்பத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது என சொல்லப்படுகிறது.
இதனிடையே மனைவியை பிரிந்ததாக நடிகர் விநாயகன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக் நேரலையில் வந்த விநாயகன் “நான் மலையாள நடிகர் விநாயகன். என் மனைவி பபிதாவுடனான திருமண கடமைகள் அனைத்தும் முழுமையாக முடிந்துவிட்டன. அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார். விநாயகனுக்கு சில வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. தனது தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைத்திருந்த அவர் இதுவரை குடும்பம் பற்றிய எந்த தகவலையும் ஊடகங்களில் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Akanksha Dubey Suicide: ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை.. வீடியோ வெளியிட்டு பிரபல நடிகை எடுத்த விபரீத முடிவு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)