மேலும் அறிய

Akanksha Dubey Suicide: ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை.. வீடியோ வெளியிட்டு பிரபல நடிகை எடுத்த விபரீத முடிவு

பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை அகன்ஷா துபே

உத்தரபிரதேச மாநிலம்  பதோஹி மாவட்டத்தின் சௌரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிர்சாபூரில் 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி பிறந்த அகன்ஷா, சிறு வயதிலிருந்தே நடனம் மற்றும் நடிப்பு மீது விருப்பமுள்ளவராக இருந்துள்ளார். தனது நடனம் மற்றும் நடிப்பு திறமையை TikTok மற்றும் Instagram செயலிகள் மூலம் வெளிக்காட்டிய அவர் ரசிகர்களிடம் பிரபலமானார். இந்தியாவில் டிக்டாக் தடைசெய்யப்பட்டபோது தான், அகன்ஷாவின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது.

அதன் வழியாக அவருக்கு போஜ்புரி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.மேரி ஜங் மேரா ஃபைஸ்லா என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவருக்கு  “வீரோன் கே வீர்' மற்றும்  கசம் பத்னா கே வாலே கி 2” ஆகிய படங்களின் வெற்றி நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனிடையே போஜ்புரி படமான லயாக் ஹூன் மெயின் நலயக் நஹி படத்திற்காக புத்த சிட்டி காலனியில் அமைந்துள்ள சுமேந்திரா ஹோட்டலில் அகன்ஷா துபே தங்கியிருந்துள்ளார். 

ஹோட்டல் அறையில் தற்கொலை 

வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்குச் சென்ற  அவர் ஞாயிற்றுக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். வழக்கம்போல காலை மேக்கப் மேன் அகன்ஷாவுக்கு போன் செய்துள்ளார். போனை யாரும் எடுக்காத நிலையில் அவர் நேரடியாக ஹோட்டலுக்கு வந்து விசாரித்துள்ளார். அப்போது அகன்ஷா தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை என்றும், அவர் உணவு கூட ஆர்டர் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த மேக்கப் மேன் ஹோட்டல் ஊழியர்கள் உதவியுடன் கதவை தட்டிப் பார்த்தும் எந்த வித பதிலும் வரவில்லை. 

இதன்பின்னர் போலீசாரை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் ஹோட்டல் மேனேஜர் மாற்றுச் சாவி மூலம் கதவை திறந்து பார்த்தப்போது அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சேலையைக் கொண்டு மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக அகன்ஷா துபே மீட்கப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் அறையில் இருந்த மொபைல் போனை கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அதேசமயம் ஹோட்டல் மேனேஜர் ரித்தேஷ் குமார் போலீசார் விசாரணையில் பல தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது அகன்ஷா துபே தங்கியிருந்த அறையில் மதுபாட்டில்கள்,சிகரெட்டுகள் இருந்ததாகவும், அந்த அறைக்கு வந்த இளைஞர் ஒருவர் சுமார் 20 நிமிடங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார். 

இதற்கிடையில் தற்கொலை செய்வதற்கு முன் இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலையில் வந்த அகன்ஷா, கதறி அழுதுள்ளார். மேலும் ஹிலோர் மேரே என்ற போஜ்புரி பாடலுக்கு கண்ணாடி முன் பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோ பகிர்ந்துள்ளார். மேலும் காதலர் தினத்தன்று சக நடிகரான சமர்சிங்கின் புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்களோடு தன்னுடைய காதலையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

தற்கொலை செய்து கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு அகன்ஷா துபே நடித்த யே ஆரா கபி ஹரா நஹி என்ற போஜ்புரி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் அகன்ஷாவின் மறைவு செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget