மேலும் அறிய

Actor Vinod Thomas: காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல மலையாள நடிகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் தாமஸ். இவர் மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும், ஒருமுறை வந்து பார்த்தாயா, ஹேப்பி வெட்டிங், ஜூன், நதொலி ஒரு செரிய மீனலா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதனிடையே கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பம்படி பகுதியில் தனியார் ஹோட்டலில் இருக்கும் கார் பார்க்கிங் பகுதியில் கார் ஒன்றில் இருந்து நடிகர் வினோத் தாமஸ் மயங்கி கிடந்துள்ளார்.

உடனடியாக ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  கார் கண்ணாடியை உடைத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வினோத் தாமஸை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவம் இணையத்தில் ரசிகர்களிடையே மிக வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

உடனடியான ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக வெளியான தகவலின்படி, ‘மது அருந்தும் பழக்கம் கொண்ட வினோத் தாமஸ் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் உள்ள பாருக்கு வந்துள்ளார். காலை 11 மணி முதல் அங்கிருந்த வினோத் மதியம் 2 மணியளவில் பார்க்கிங் பகுதிக்கு சென்று தனது காரில் அமர்ந்து ஏசியை ஆன் செய்துள்ளார். அவர் காரின் உள்ளே ஏறும் போது கவனித்த ஹோட்டல் ஊழியர்கள் 2 மணி நேரமாகியும் மீண்டும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து அருகே சென்று பார்த்துள்ளனர்.

மேலும் வினோத் தாமஸ் செல்போனுக்கும் தொடர்பு கொள்ளப்பட்ட நிலையில் அதுவும் பலனளிக்காததால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பிறகே கண்ணாடியை உடைத்து வினோத் தாமஸ் உடலானது மீட்கப்பட்டுள்ளது. மேலும் காருக்குள்  வாந்தி எடுத்ததாகவும், அதன் விஷவாயு காரில் ஏசி மூலம் சுவாசிக்கப்பட்டதால் வினோத் தாமஸ் உயிரிழந்திருக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் வினோத் தாமஸ்  மரணத்திற்கு காரணம் என்னவென்று தெரிய வரும். இதனிடையே 47 வயதான வினோத் தாமஸ் மரணத்திற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க: IND vs AUS Final Score LIVE: பகையுடன் காத்திருக்கும் இந்தியா..? பதம் பார்க்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா.. வெற்றி யாருக்கு..?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Embed widget