Director Hari: பிரபல இயக்குநர் ஹரியின் தந்தை திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநராக உள்ள ஹரியின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநராக உள்ள ஹரியின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரசாந்த் நடித்த தமிழ் படத்தின் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஹரி. தொடர்ந்து விக்ரம் நடித்த சாமி படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சிம்பு நடித்த கோவில், விஷால் நடித்த தாமிரபரணி,பூஜை மற்றும் சூர்யா நடித்த ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, அருண் விஜய் நடித்த யானை, விக்ரம் நடித்த சாமி 2 ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் சிறந்த கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார்.
தற்போது விஷாலின் 34வது படத்தை அவர் இயக்கி வரும் நிலையில், இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் , சிறிது காலமாக உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்பட்டிருக்கும். இதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியின் தந்தை மறைவுக்கு ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.