மேலும் அறிய

HBD Fahadh Faasil | ’மலையாள சினிமாவின் மகேந்திர பாகுபலி..உலகநாயகனின் கனவுநாயகன்..' : ஹேப்பி பர்த்டே ஃபாஃபா..!

சூப்பர் ஸ்டார்கள் கூட ’விக்’ வைத்துதான் தனது கான்ஃபிடன்ஸைக் கூட்டிக்கொள்ளும் சினிமாவில், தலைமுடியின் மீது வைக்கும் நம்பிக்கையைத் நடிப்பின்மீது வை என அதை மட்டுமே மூலதனமாக்கி முன்னேறியவர்.

மலையாள சினமா உலகின் மம்முட்டி மோகன்லால்களின் காலம் 2010-களோடு முடிந்த தருவாயில் அங்கே சர்வதேச சினிமாக்களின் தாக்கத்தில் புதிய அலை சினிமாக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. சர்வதேச சினிமாக்களின் தாக்கம் என்றாலும் அந்தப் படங்களின் வேர் என்னவோ கேரளாவைதான் மையமாகக் கொண்டிருந்தது.  இந்தப் புதிய அலையில் பாய்மரமென பாய்ந்து சென்ற நடிகர்களில் எதார்த்த நடிகன் ஃபஹத் ஃபாசிலை முன்னத்தி ஏராக நிறுத்தலாம். மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான், ஜெயராமின் மகன் காளிதாஸ், நடிகர்கள் குடும்பத்திலிருந்து வந்த பிருத்விராஜ் என நடிகர்களின் பிள்ளைகள்தான் வாரிசுகளாக உருவாக முடியும் என்கிற நம்பிக்கையைத் தகர்த்து கேரள இளையதலைமுறையைத் தன் வசப்படுத்திக் கட்டிப்போட்டவர் இயக்குநர் ஃபாசிலின் மகனான ஃபஹத் பாசில். 

HBD Fahadh Faasil |  ’மலையாள சினிமாவின் மகேந்திர பாகுபலி..உலகநாயகனின் கனவுநாயகன்..' : ஹேப்பி பர்த்டே ஃபாஃபா..!

எழுத்தாளர் ஆதவனின் சிறுகதைகளில் வருவது போல ’சிகப்பா...உயரமா...மீசை வைச்சுக்காம...’ என்பதுதான் ஹேண்ட்ஸம் என்று கண்மூடித்தனமாகக் கற்பிதத்தில் ஊறியிருந்த சினிமாவில் அந்தக் க்ளீஷேக்களை எல்லாம் உடைத்தவர் ஃபஹத். உயரம் 5.6 அடி, மாநிறம், சூப்பர் ஸ்டார்கள் கூட ’விக்’ வைத்துதான் தனது கான்ஃபிடன்ஸைக் கூட்டிக்கொள்ளும் சினிமா உலகத்தில் முடி மீது வைக்கும் நம்பிக்கையைத் தன் அசுரத்தனமான நடிப்பின்மீது வைத்து அதை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தனக்கான பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் மலையாள சினிமாவின் இந்த மகேந்திர பாகுபலி.  

19 வயதில் இயக்குநர் ஃபாசில் முதன்முதலில் தனது திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகப்படுத்தினார். படம் மோசமான தோல்வியைச் சந்தித்தது. ஃபஹத்துக்கும் திரைமொழி பிடிபடவில்லை. அடுத்து ஏழாண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்தார் ஃபஹத். 2009-ஆம் ஆண்டில் மீண்டும் கேரளா கஃபே திரைப்படம் வழியாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். அவரது கம்பேக் மலையாள சினிமாவுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. சப்பா குரிசு, டைமண்ட் நெக்லேஸ், 22 ஃபீமேல் கோட்டயம், அன்னெயும் ரசூலும், பெங்களூரு டேஸ், ஐயோபிண்டே புஸ்தகம், கும்பலாங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம், மாலிக் என ஃபஹத் ஃப்ரீஹிட்  அடித்த அத்தனையும் கோல் போஸ்டை சிதறடித்துக் கொண்டு சென்றது. அவரை சிறந்த நடிகர் என அங்கீகரித்து கேரள அரசு அவருக்கு மூன்று முறை விருது வழங்கியது.

HBD Fahadh Faasil |  ’மலையாள சினிமாவின் மகேந்திர பாகுபலி..உலகநாயகனின் கனவுநாயகன்..' : ஹேப்பி பர்த்டே ஃபாஃபா..!

ஸ்டார்கள் என்றாலே சர்ச்சைகளில் சிக்குவதும் சாதாரணம் என்று ஆகிவிட்ட காலத்தில் அன்னையும் ரசூலும் படத்தில் இணைந்து நடித்த ஆண்ட்ரியாவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டார் ஃபஹத். ‘ஆமாம்.நான் அவளை நேசிக்கிறேன்’ என வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார் ஃபஹத். காதலை ரிஜக்ட் செய்தார் ஆண்ட்ரியா. காதல் ஒருமுறைதான் பூக்கும் ஒருவரிடம்தான் பூக்கும் என்கிற ப்ளாக் அண்ட் வைட் காலத்து லாஜிக்கையெல்லாம்  நொறுக்கியடித்து ஃபஹத்தின் வாழ்க்கையில் 'ஸ்டார் டஸ்ட்' மேஜிக்காக நுழைந்தார் நஸ்ரியா.

HBD Fahadh Faasil |  ’மலையாள சினிமாவின் மகேந்திர பாகுபலி..உலகநாயகனின் கனவுநாயகன்..' : ஹேப்பி பர்த்டே ஃபாஃபா..!

19 வயது நஸ்ரியா 32 வயது ஃபஹத்துக்கு எப்படிப் பொருத்தமாக இருப்பார் என மக்கள் செய்த கமெண்ட்ஸ் எல்லாம் காணாமல் போகும் வகையில் இன்றைய தேதியில் இன்ஸ்டாவின் ஃப்ரெண்ட்லியான காதல் ஜோடி நஸ்ரியாவும் ஃபஹத்தும்தான். 

HBD Fahadh Faasil |  ’மலையாள சினிமாவின் மகேந்திர பாகுபலி..உலகநாயகனின் கனவுநாயகன்..' : ஹேப்பி பர்த்டே ஃபாஃபா..!

உண்மையைச் சொல்லப்போனால் உலகநாயகனே பொறாமைகொள்ளும் நடிகன் ஃபாஹத் ஃபாசில் எனலாம். இளைய தலைமுறை நடிகர்களில் நீங்கள் யாருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு கமல்ஹாசன் உச்சரித்த முதல் பெயர் ஃபஹத் ஃபாசில். உலகநாயகனின் கனவுநாயகன் ஃபஹத் என்று சொன்னால் அது மிகையல்ல. தற்போது அந்தக் கனவை ‘விக்ரம்’ படம் மூலம் நிறைவேற்றிக் கொண்டுள்ளார் கமல். கனவுநாயகன் ஃபஹத்துக்கு ஹேப்பி பர்த்டே! 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Embed widget