Aavesham Teaser: வில்லன் ரோலில் மீண்டும் அதகளம் செய்யும் ஃபஹத் ஃபாசில்.. வரவேற்பைப் பெறும் ‘ஆவேஷம்’ டீசர்!
Fahadh Faasil: பொதுவாகவே மாறுபட்ட கெட்- அப்களைத் தேர்ந்தெடுத்து அசத்தும் ஃபஹத், இந்த டீசரில் கழுத்து நிறைய சங்கலி, வேட்டி சகிதம் லோக்கல் ரவுடியாக வலம் வந்து மீண்டும் வில்லன் லுக்கில் அசத்தியுள்ளார்.
நடிகர் ஃபஹத் ஃபாசில் (Fahadh Faasil) வில்லன் ரோலில் நடிக்க பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 'ஆவேஷம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து வில்லன்
சென்ற ஆண்டு மலையாள சினிமா தாண்டி தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி பெரும் ஹிட் அடித்த திரைப்படம் ‘ரோமஞ்சம்’. காமெடி மற்றும் பேய் கதைக்களத்தைச் சேர்ந்த இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் இன்ஸ்டா ரீல்ஸை ஆக்கிரமித்து பெரும் ஹிட் அடித்தன.
இந்நிலையில், ‘ரோமஞ்சம்’ பட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக ஜித்து மாதவன் இயக்கும் திரைப்படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் ஃபஹத் ஃபாசில் நடித்து வருகிறார். சென்ற ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் கொடூர வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கொண்டாட வைத்த ஃபஹத், இந்தப் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறார்.
முக்கியப் பாத்திரத்தில் மன்சூர் அலிகான்
ரோமஞ்சம் படத்துக்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். ஃபஹத்தின் மனைவியும் நடிகையுமான நஸ்ரியா இந்தப் படத்தை அன்வர் ரஷீத் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஆவேஷம் படத்தின் டீசர் (AAVESHAM Official Teaser) வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. பொதுவாகவே மாறுபட்ட கெட்- அப்களைத் தேர்ந்தெடுத்து அசத்தும் ஃபஹத், இந்த டீசரில் கழுத்து நிறைய சங்கலி, வேட்டி, சகிதம் லோக்கல் ரவுடியாக வலம் வந்து மீண்டும் வில்லன் லுக்கில் அதகளம் செய்துள்ளார்.
மலையாள சினிமா தாண்டிய ஃபஹத்தின் ரசிகர்கள் மத்தியில் இந்த டீசர் வரவேற்பைப் பெற்று வருகிறது, வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
நடிகர் மன்சூல் அலிகான் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்தப் படத்தின் டீசர் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
வடிவேலுவுடன் மாரீசன்
மாமன்னன் படத்துக்குப் பிறகு மீண்டும் வடிவேலுவுடன் ஃபஹத் இணையும் படம் பற்றிய அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. மாமன்னன் படத்தில் ஃபஹத் - வடிவேலு இருவரும் போட்டி போட்டு நடித்திருந்த நிலையில்ம்m இந்த இணை மீண்டும் திரையில் இணைவார்களா என ரசிகர்களுடன் ஆர்வமாகக் காத்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
மாரீசன் என இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. சுதீஷ் ஷங்கர் இந்தப் படத்தை இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
மாமன்னன் படத்தைப் போல் சீரியஸ் கதைக்களம் இல்லாமல் இந்தப் படம் ஒரு சாலை பயணத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
மற்றொருபுறம் ஃபஹத் டோலிவுட் சினிமாவில் வில்லனாக நடித்துள்ள புஷ்பா 2 படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது, இந்த ஆண்டு புஷ்பா 2 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: To Kill a Tiger: ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவணப்படம் “To Kill a Tiger”.. இதுவரை வென்ற விருதுகள் என்னென்ன?
Dr Ramadoss: திரைப்படமாகும் ராமதாஸ் வாழ்க்கை.. ஹீரோவாக சரத்குமார்? - வெளியான தகவல்!