Marimuthu Death: 'இமயம் சரிந்தது' தனது கண்ணீர் அஞ்சலி பேனர் முன்பு செல்பி எடுத்த மாரிமுத்து... வைரலாகும் புகைப்படம்..!
எதிர்நீச்சல் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமான நடிகர் மாரிமுத்துவின் மரணத்தால் ரசிகர்களும், திரையுலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
Marimuthu Death: மறைந்த நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்த விழா நாயகன் படத்தில் தனக்கு அடித்த கண்ணீர் அஞ்சலி பேனர் முன்பு நின்று செல்பி எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த மாரிமுத்து:
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்றவர் இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து. இவர் இன்று காலை சீரியலின் டப்பிங் பேசி கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இந்த திடீர் இழப்பு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த திரைப்பட நடிகருக்கு பிரபலங்கள் பலரும் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
கடந்த 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த 'ஜெயிலர்' படத்திலும் நடித்திருந்த மாரிமுத்து, சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதேபோல், ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் மாரிமுத்து நடித்துள்ளார். சீரியல், திரைப்படம் என பரபரப்பாக இருந்த மாரிமுத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததாக கூறப்படுகிறது.
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்:
இந்த சூழலில் மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே, பகவான் கிருஷ்ணா இயக்கத்தில் மாரிமுத்து நடித்த 'விழா நாயகன்' படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிரது. விழா நாயகன் படத்தில் நடித்தபோது தனது கேரக்டருக்கு வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பேனர் முன்பு நின்று மாரிமுத்து செல்பி எடுத்துள்ளார். அதை படப்பிடிப்பில் இருந்த ஒருவர் புகைப்படமாக எடுத்துள்ளார். இமயம் சரிந்தது என குறிப்பிடப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பேனரில் மாரிமுத்து செல்பி எடுக்கும் புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
காலை முதல் சென்னை விருகம்பாக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்ட அவரது உடலை பார்த்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒரு நல்ல திரைத்துரை கலைஞனை இழந்து விட்டதாக திரை பிரபலங்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: RIP Marimuthu: "நம்பவே முடியவில்லை.. ஏன் இவ்வளவு அவசரம்..?" ஆதி குணசேகரன் மறைவால் சோகத்தில் ஈஸ்வரி, நந்தினி..!