Entertainment Headlines: நாளை தொடங்கும் பிக் பாஸ் 7.. விஷால் நன்றி.. சமுத்திரக்கனி ஆதங்கம்.. சினிமா செய்திகள் இன்று!
Entertainment Headlines Sep 30: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாகக் காணலாம்.
இனி விஜய் ஆண்டனியின் ராஜ்ஜியம் தான்.. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் 'ஹிட்லர்' ஃபர்ஸ்ட் லுக்
இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தைத் தயாரித்து வெற்றிகண்ட செந்தூர் ஃபில்ம் இண்டர்நேஷனல் நிறுவனம், தங்களது 7ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டி.டி. ராஜா, டி.ஆர். சஞ்சய் குமார் தயாரிப்பில் இயக்குநர் தனா இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர த்ரில்லர் திரைப்படம் ‘ஹிட்லர்’. மேலும் படிக்க
கூல் சுரேஷ் முதல் பவா செல்லதுரை வரை... இவங்க எல்லாரும் தான் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களா!
பிக் பாஸ் சீசன் 7 நாளை விஜய் டிவியில் கொண்டாட்டமாகத் தொடங்க உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் டை ஹார்ட் ஃபேன்ஸ் இந்த நிகழ்ச்சி நாளை தொடங்கப் போகிறது என்றாலும்,போட்டியாளர்கள் யார் யார் என முன்கூட்டியே தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த முறை இரண்டு வீடு என்பதே அவர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்து வருகிறது. தற்போது உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். மேலும் படிக்க
சென்சார் போர்டு விவகாரம் : பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த விஷால்..
'‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை சென்சார் செய்ய தணிக்கை குழு அதிகாரிகளுக்கு ரூ.6.5 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் அதை திரையிடுவதற்காக தனியாக ரூபாய் 3.5 லட்சம் மற்றும் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக 3 லட்சம் ரூபாயும் தனிப்பட்ட நபர் ஒருவரின் வாங்கி கணக்குக்கு செய்தியாக குற்றச்சாட்டப்பட்டு இருப்பதாக கூறி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வருக்கு இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். மேலும் படிக்க
படம் ரிலீசுக்காக விஷால் போல் லஞ்சம் கொடுத்த சமுத்திரகனி - எந்த படத்திற்கு தெரியுமா?
நடிகர் விஷாலை தொடர்ந்து அப்பா படத்துக்கு வரிவிலக்கு சான்றிதழ் பெற லஞ்சம் கொடுத்ததாக நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இந்தியில் திரையிட மும்பை சென்சார் போர்டுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும், அதற்கான வங்கி கணக்கு பரிவர்த்தனை மற்றும் ஆடியோ ஆதாரங்களை விஷால் வெளியிட்டிருந்தார். மேலும் படிக்க
மருத்துவராக, ஏழைகளுக்கு சேவை செய்யும் நடிகர் செந்தில் மகன்
காமெடி நடிகர் செந்திலின் மகன் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 90 கிட்ஸ்களின் பேவரைட் காமெடி செந்தில், கவுண்டமணி காமெடி தான். இருவரின் காமெடிகளும் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது. கரக்காட்டக்காரனில் வரும் கவுண்டமணி, செந்தில் காமெடி என்றென்றும் எவர்கிரீன் தான். தனது காமெடி நடிப்பால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்தான் நடிகர் செந்தில். மேலும் படிக்க
அழகென்பது கொண்டாடப்பட வேண்டியது.. உங்களுக்கு மோனிகா பெல்லுசியை தெரியுமா?
அவர் பெயரைச் சொன்னால் உங்களுக்கு அவரை அடையாளம் தெரியாமல் இருக்கலாம். அவர் நடித்த படத்தின் பெயரைச் சொன்னால் ஒரு சிலருக்குத் தெரியலாம். ஆபாசப் படங்களின் தளத்தில் அவர் நடித்தப் படங்களின் காட்சிகளை ஒரு சிலர் பார்த்திருக்கலாம். ஆனால் முதல் முறை அவரை பார்க்கும் ஒருவர் ஏதோ ஒரு வகையில் தான் வாழ்க்கையில் பார்த்த அழகான பெண்களில் ஒருவராக மோனிகாவை சொல்வார்கள்..மேலும் படிக்க