Entertainment Headlines Sep 20: விஜய் ஆண்டனி மகளுக்கு இறுதி அஞ்சலி.. விஜய் அப்பாவுடன் இணையும் அஜித்.. இன்றைய சினிமா செய்திகள்!
Entertainment Headlines Sep 20: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாகக் காணலாம்.
மீரா உடல் நல்லடக்கம்.. கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி குடும்பத்தினர்..
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றது. தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் மீராவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முக திறமை கொண்ட அவரின் சினிமா பயணம் என்பது மிகவும் கரடு முரடானது. மேலும் படிக்க
ஒரு லஞ்ச் பாக்ஸால் இணையும் மனிதர்கள்..10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் ரசிகர்கள்..
இர்ஃபான் கான் , நிர்மத் கார், நவாசுத்தின் சித்திக் ஆகியவர்கள் நடித்து ரிதேஷ் பத்ரா இயக்கிய தி லஞ்ச் பாக்ஸ் திரைப்படம் பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் லஞ்ச் பாக்ஸ். அந்த ஆண்டு சர்வதேச கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறப்பான வரவேற்பைப் பெற்றது. லஞ்ச் பாக்ஸ் திரைப்படத்தைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் முதலில் மும்பையில் இருக்கும் டப்பாவாலா பற்றி நமக்குத் தெரிய வேண்டும். மேலும் படிக்க
விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் இணையும் சஞ்சய்தத்... விடாமுயற்சியில் வில்லனா..?
நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அஜித்குமார்-தமன்னா வீரம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்த நிலையில் விடாமுயற்சியிலும் அஜித்குமாருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் படிக்க
என்னது.. சாய் பல்லவிக்கு கல்யாணம் முடிஞ்சுதா? இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்.. உண்மை என்ன?
பிரபல நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் நடைபெற்றதாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவரான சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னால் 2005 ஆம் ஆண்டு கஸ்தூரி மான் மற்றும் 2008 ஆம் ஆண்டு வெளியான தாம் தூம் படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருந்தார். மேலும் படிக்க
அன்பும், கோபமும் கொண்ட ஆளுமை.. ’ட்ரெண்டிங் ஸ்டார்’ மிஷ்கின் பிறந்தநாள் இன்று..!
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக கொண்டாடப்படும் நடிகர் மிஷ்கின் இன்று 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மிஷ்கினின் இயற்பெயர் சண்முகராஜா என்பது இங்கு பலருக்கும் தெரியாது. பின்னர் ஏன் அவர் மிஷ்கின் என அழைக்கப்படுகிறார் என நினைக்கிறீர்களா?. ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியின் தி இடியட் நாவலின் கதாநாயகனான இளவரசர் பெயர் மிஷ்கின். மேலும் படிக்க
வசூலில் ஆதிக்கம் செலுத்தும் தென் இந்திய படங்கள்... இந்திய சினிமா பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
ஷாருக் நடித்துள்ள சமீபத்தில் வெளியான ஜவான் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சென்ற மாதம் வெளியான ஜெயிலர் வரை, இந்த ஆண்டில் பல படங்கள் ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் வசூலில் குறிப்பிடத்தகுந்த பங்காற்றி இருக்கின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போதைய செப்டெம்பர் மாதம் வரை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம். மேலும் படிக்க