Entertainment Headlines Sep 19: விஜய் ஆண்டனி மகள் மரணம்.. லியோ அப்டேட் ஒத்திவைப்பு..இன்றைய சினிமா செய்திகள்..!
Entertainment Headlines Sep 19: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாகக் காணலாம்.
- அதிர்ச்சி! இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை.. திரையுலகமே சோகம்..!
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை 3 மணியளவில் உயிரை மாய்த்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க
-
கோல்டன் டிக்கெட் வழங்கி சிறப்பு கௌரவம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிசிசிஐ கொடுத்த சூப்பர் ஆஃபர்
உலகக் கோப்பையை முன்னிட்டு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இதனிடையே ஜெய் ஷா,ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து 2023 உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். இதன்மூலம், இந்தியா முழுவதும் உள்ள எந்த மைதானத்திலும் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை ரஜினிகாந்த் இலவசமாக காணலாம். மேலும் படிக்க
- விஜய் ஆண்டனி மகள் மரணம்.. ‘லியோ’ படத்தின் அப்டேட் இன்று இல்லை என அறிவித்த படக்குழு..!
நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மரணமடைந்த நிலையில், அவரது மறைவுக்கு லியோ திரைப்படக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இன்று (செப்டம்பர் 20) லியோ படத்தின் மலையாள போஸ்டர் வெளியாகவிருந்தது. இந்நிலையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம், ‘விஜய் ஆண்டனியின் ஈடுசெய்ய முடியாத இழப்பு எங்கள் இரங்கல்கள். உங்களுக்காகவும், குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனைகள் செய்கிறோம். மேலும் மீராவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய லியோ போஸ்டர் வெளியீடு ஒத்திவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- தனது பெயரில் போலி கணக்கு தொடங்கி பெண்களிடம் மோசடி.. எச்சரித்த பாலா..
தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பெண்களை ஏமாற்றுவதாக இயக்குநர் பாலா தரப்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாலாவின் பெயரில் யாரோ ஒருவர் பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவரது கவனத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
- ஒரே சண்டை காட்சியால் முடிந்த சினிமா வாழ்க்கை.. நடிகர் ‘என் உயிர் தோழன்’ பாபு மரணம்..
உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பிரபல நடிகர் ‘என் உயிர் தோழன்’ பாபு இன்று உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மனசார வாழ்த்துங்களேன்’ படத்தில் சண்டை காட்சியில் ரிஸ்க் எடுத்து நடிப்பதாக கூறி நிலைதடுமாறி விழுந்தார். இதில் அவருடைய முதுகுப்பகுதியில் பலத்த அடிப்பட்டது. 20 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த பாபு இன்று உயிரிழந்தார். மேலும் படிக்க