Entertainment Headlines Sep 14: சிம்பு, தனுஷூக்கு ரெட் கார்ட்.. பெற்றோருடன் விஜய்.. ஜவான் வசூல் சாதனை.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines Sep 14: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாகக் காணலாம்.
![Entertainment Headlines Sep 14: சிம்பு, தனுஷூக்கு ரெட் கார்ட்.. பெற்றோருடன் விஜய்.. ஜவான் வசூல் சாதனை.. இன்றைய டாப் சினிமா செய்திகள்! Entertainment Headlines Today September 14 Tamil Cinema News ashok selvan Jawan Vijay red card AR Rahman Entertainment Headlines Sep 14: சிம்பு, தனுஷூக்கு ரெட் கார்ட்.. பெற்றோருடன் விஜய்.. ஜவான் வசூல் சாதனை.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/14/5419681d236afe566bbda4fb28ba25b81694691828424574_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு - தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்
நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு எதிராக ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு மீது ஏற்கெனவே பல முறை புகார்கள் எழுந்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பணத்தை முறையாக கையாளததால் விஷாலுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
ஆறு நாள்களில் ரூ.621 கோடி வசூல்.. பதான் சாதனையை ஜவானாக முறியடிக்கும் முனைப்பில் ஷாருக்!
அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படம் பாலிவுட்டில் வசூல் சாதனை படைத்து வருகிறது. ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, சஞ்சய் தத், தீபிகா படூகோன், பிரியாமணி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஷாருக் கானின் மனைவி கெளரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மேலும் படிக்க
‘செம போதை ஆகாத’ படத்தில் ரூ.6.10 கோடி ஏமாற்றியதாக அதர்வா மீது பரபரப்பு புகார்..
நடிகர் படம் தயாரிப்பதாகவும், நடிப்பதாகவும் கூறி ரூ.6.10 கோடி வரை ஏமாற்றியதாக தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் மதியழகன் புகார் கூறியது திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு மதியழகன் அளித்த புகாரில், ‘செம போதை ஆகாத’ படத்தில் நடிப்பதாக கூறி அதர்வா பண மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்க
ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி.. கேளிக்கை வரி செலுத்தாததால் சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்துக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை பனையூர் அருகே ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா இசை நிகழ்வு கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. திரையுலகில் தனது 20 ஆண்டு கால இசை பயணத்தை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் பொறுப்பு ஏசிடிசி நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. மேலும் படிக்க
கர்மானா என்னனு தெரியுமா டா... கார்த்தியின் ஜப்பான் பட டப்பிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தின் டப்பிங்க் வேலைகள் தொடங்கியுள்ளன. தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் ஆக்ஷன் நடிகராக அதே நேரத்தில் காமெடி , ரொமான்ஸ், நகைச்சுவை என எல்லா வகைகளில் ரசிகர்களை கவரும் வகையில் நடித்து வரும் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் நடிகராக அறிமுகமான கார்த்தி இதுவா இவரது நடிக்கும் முதல் படம் என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் படிக்க
அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையுடன் அப்பா எஸ்.ஏ.சியை சந்தித்த விஜய்.. வைரலாகும் ஃபோட்டோ!
நடிகர் விஜய் - வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்துக்காக முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இப்பட பணிகளுக்காக அமெரிக்காவுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். விஜய் அமெரிக்காவில் இருக்கும் புகைப்படங்கள் கடந்த வாரங்களில் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவும் தன் பங்குக்கு புகைப்படங்கள் பகிர்ந்து விஜய் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்தார். மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)