மேலும் அறிய

Vijay with SAC: அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையுடன் அப்பா எஸ்.ஏ.சியை சந்தித்த விஜய்.. வைரலாகும் ஃபோட்டோ!

நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையுடன், அறுவை சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் - வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்துக்காக முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள நிலையில்,  இப்பட பணிகளுக்காக அமெரிக்காவுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய விஜய்

விஜய் அமெரிக்காவில் இருக்கும் புகைப்படங்கள் கடந்த வாரங்களில் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவும் தன் பங்குக்கு புகைப்படங்கள் பகிர்ந்து விஜய் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று விஜய் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய அவரது ஏர்போர்ட் லுக் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

வைரலான எஸ்.ஏ.சி ஆடியோ

இதனிடையே, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய வீடியோ ஒன்று முன்னதாக இணையத்தில் வெளியானது. அதில் தனக்கு ஏதோ உடல்நலக்குறைவு என்றும், மருத்துவர் அறிவுரையின்படி தான் ஸ்கேன் செய்து பார்த்ததுடன், இரண்டே நாள்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் ஸ்கேன் செய்ததால் பிரச்னையை கண்டுபிடித்து தான் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் இது நல்ல விஷயம் நம் மனதை பாசிட்டிவ்வாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எஸ்.ஏ.சி இந்த ஆடியோவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பாக்குது...


Vijay with SAC: அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையுடன் அப்பா எஸ்.ஏ.சியை சந்தித்த விஜய்.. வைரலாகும் ஃபோட்டோ!

இந்நிலையில், தற்போது அறுவை சிகிச்சை முடிந்து திரும்பிய தன் தந்தை மற்றும் தன் தாய் ஷோபாவை நடிகர் விஜய் சந்தித்த புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்னை என தகவல்கள் வந்த நிலையில், இந்தப் புகைப்படம் இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சூர்ய வம்சம் க்ளைமேக்ஸ் போல் இப்புகைப்படம் வெளியாகி தங்களை மகிழ்வித்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வாரிசு படத்தின் மூலம் ஹிட் கொடுத்து வெற்றிகரமாகத் தொடங்கிய விஜய், அடுத்த படமும் சூப்பர் ஹிட் தருவாரா என எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர். 

முன்னதாக லியோ படத்தின் நா ரெடி தான் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. விஜய்யே இப்பாடலை பாடியுள்ள நிலையில் இப்பாடல் ஒரு பக்கம் வரவேற்பையும், மறுபக்கம் குடி பற்றிய வரிகள், மற்றும் விஜய் சிகரெட்  பிடித்ததற்காக கண்டனங்களையும் பெற்றது. இந்நிலையில், லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ. ராசா
Breaking News LIVE: அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ. ராசா
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ. ராசா
Breaking News LIVE: அவசர நிலை பிரகடனத்தை பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை - ஆ. ராசா
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள்  - முழு விவரம்
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள் - முழு விவரம்
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
Embed widget