Entertainment Headlines: லியோ ட்ரெய்லர், அயலான் டீசர்.. தலைவர் 170.. வரிசைகட்டி வந்த அப்டேட்ஸ்.. சினிமா செய்திகள் இன்று!
Entertainment Headlines Oct 02: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாகக் காணலாம்.
ஏலியனுடன் களமிறங்கிய சிவகார்த்திகேயன்.. அயலான் படத்தின் டீசர் தேதி அறிவிப்பு..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் (Ayalaan) படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “அயலான்”. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். மேலும் சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் படிக்க
பிரபல நடிகைகளை ஓரம்கட்டி ஏன் இந்த முடிவு... யார் இந்த மீனாட்சி செளத்ரி?
வெங்கட் பிரபு இயக்க இருக்கும் தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிக்க இருக்கிறார் நடிகை மீனாட்சி செளத்ரி. ஏற்கெனவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் மீனாட்சி நடித்துவரும் நிலையில் தற்போது தமிழில் இருக்கும் பிரபல நடிகைகளை ஓரம்கட்டி புதுமுகமான மீனாட்சியைத் தேர்வு செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் படிக்க
இரண்டாவது நாளாக தொடரும் “தலைவர் 170 அப்டேட்”... லிஸ்ட்டில் இணையும் பிரபலங்கள்...!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 170வது படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு ரூ.600 கோடி அளவில் வசூல் வேட்டை நிகழ்த்தியது. மேலும் படிக்க
சத்தமே இல்லாமல் நடைபெற்ற சம்பவம்.. தளபதி 68 படத்திற்கு பூஜை போட்டாச்சு.. இணையும் பிரபலங்கள்..!
நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இனிதே நடந்து முடிந்துள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடைசியாக நடப்பாண்டு பொங்கல் அன்று வாரிசு படம் வெளியாகியது. வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இப்படத்தை தொடந்து அவரது நடிப்பில் அடுத்ததாக “லியோ” படம் உருவாகியுள்ளது. மேலும் படிக்க