Entertainment Headlines May 11: மாமன்னன் படம் உருவான கதை.. கஸ்டடி படத்தின் ஷாக்கிங் தகவல்.. லேட்டஸ்ட் சினிமா செய்திகள்..!
Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.
- மாமன்னன் படம் உருவானது எப்படி..? மனம் திறந்த மாரிசெல்வராஜ்..!
உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் மாமன்னன் படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில், கர்ணன் படத்தை பார்த்த பிறகு உதயநிதி என்னை அழைத்தார். என்னிடம், “நான் சினிமாவில் இருந்து விலகலாம் என முடிவெடுத்துள்ளேன். உங்களோட எனது கடைசி படம் இருக்கணும்னு ஆசைப்படுறேன்” என கூற மாமன்னன் படம் உருவானதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் படிக்க
- கோலாகலமாக நடந்து முடிந்த 14வது நார்வே தமிழ் திரைப்பட விழா!
நார்வேயில் வசித்து வரும் தமிழ் மக்களின் ஆதரவுடன் நான்கு நாட்கள் குறும்படங்கள், முழுநீளத் திரைப்படம் , ஆவணப்படம், சர்வதேச திரைப்படங்கள், காணொளிகள் ஆகியவை திரையிடல் , ஆடல், பாடலுடன் கூடிய கொண்டாட்டமான திரைப்பட விழா நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் விசாரணை, அசுரன் படங்களுக்கு சிறந்த இயக்குநருக்கான பரிசு வழங்கப்பட்டது. மேலும் இந்த திரைப்பட விழாவில்இரவின் நிழல், இருள் அத்தியாயம், பாலை நிலன், செந்தோழன் செங்கதிரவன், மாமனிதன், சிறகு ஆகிய படங்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மையுடன் ஜெயிக்க வேண்டும்’: சிறப்பு பூஜை செய்த நமீதா
நடிகை நமீதா தனது பிறந்தநாளை முன்னிட்டு 1008 தாமரைகளைக் கொண்டு சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடத்தியுள்ளார். நேற்று அவர் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். கர்நாடக தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஜெயிக்க வேண்டும் என பூஜை நடத்தியதாக குறிப்பிட்டார். மேலும் படிக்க
- ஒரு படத்தை தடைசெய்வது என்பது தவறான அணுகுமுறை - இயக்குனர் அனுராக் காஷ்யப்
திரைப்படங்களுக்கு தடை விதிக்கும் வழக்கத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இப்படம் மதப்பிரிவினியை தூண்டுவதாக கூறி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- கஸ்டடி படம் இந்த படத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதா? - உண்மையை ஒப்புக் கொண்ட வெங்கட்பிரபு
நாகசைதன்யா, கிரித்தி ஷெட்டி நடிக்க, சரத்குமார், அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் “கஸ்டடி”. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் இப்படம் மலையாளத்தில் வெளியான நயட்டு படத்தை பார்த்து எழுதப்பட்டதாக வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் நாளை வெளியாகிறது. மேலும் படிக்க