மேலும் அறிய

Entertainment Headlines May 05: விடைபெற்ற மனோபாலா...தி கேரளா ஸ்டோரிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி...இன்றைய டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

லியோ ஸ்பாட்டில் விஜய்யுடன் கூல் போஸ்... த்ரிஷாவின் பர்த்டே க்ளிக்!

லியோ படப்பிடிப்பு தளத்தில் விஜய் - த்ரிஷா இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டின் க்யூட் குயினாக வலம் வரும் நடிகை த்ரிஷா, இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய்யுடன் லியோ படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷா பங்கேற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் படிக்க

விடைபெற்றார் மனோபாலா.. திரையுலகினர், ரசிகர்கள் சூழ நடைபெற்ற இறுதி ஊர்வலம்..

ஒல்லியான தேகம், வித்தியாசமான வசன உச்சரிப்பு என இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனோபாலா நடிகராக பரீட்சையமானார். ஆனால் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக  புதிய வார்ப்புகள் படத்தில் இருந்து சில படங்கள் பணியாற்றிய மனோபாலா, ‘ஆகாய கங்கை’ படத்தின் மூலம் இயக்குநராக எண்ட்ரீ கொடுத்தார். தமிழ்சினிமாவில் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை வைத்து 20 படங்களை இயக்கியுள்ளார். மேலும் படிக்க

குறுக்கே வரும் ஜெயிலர்? .. முன்கூட்டியே ரிலீசாகும் மாவீரன்..அதிருப்தியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என்ற தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  பிரின்ஸ் படத்தின் தோல்வியால், நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த தனது படங்களை மிக கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் அவர் ஒரு படம் நடித்து வருகிறார். “மாவீரன்” என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாகவும், மிஷ்கின் வில்லனாகவும் நடிக்கிறார். மேலும் படிக்க

'அரசியலுக்கு வரமுடியல.. அப்புறம் ஏன் அரசியல் பேசணும்?' - ரஜினியை கடுமையாக விமர்சித்த ரோஜா

ரஜினியால் அரசியலுக்கு வர முடியாத நிலையில், அவர் ஏன் அரசியல் பேச வேண்டும் என நடிகை ரோஜா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தான் ஆந்திர அரசியலின் இப்போதைய ஹாட் டாபிக். கடந்த வாரம் என்.டி.ராமாராவ் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசிய கருத்துகள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினரிடையே கடுமையான கருத்து மோதல்களை உருவாக்கியுள்ளது. மேலும் படிக்க

இதுதான் நிஜமான கேரளா ஸ்டோரி.. மதநல்லிணக்க வீடியோ பகிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான்

கேரளாவைப் பற்றிய வெறுப்பு பிரச்சாரங்களுக்கு பதிலடி தரும் வகையில், கேரளாவில் மசூதி ஒன்றில் இந்து முறைப்படி நிகழ்ந்த திருமணத்தைப் பற்றிய வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற கதைக்களத்துடன் ‘தி கேரளா ஸ்டோரி’ எனும் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வெளியானது. மேலும் படிக்க

மகனே எனது பலம்... பலருக்கும் உதாரணமாக இருக்கும் போல்டான சிங்கிள் மாம் மேக்னா ராஜ் பிறந்தநாள் இன்று!  

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா - கன்னட நடிகை மேக்னா ராஜ் நான்காம் ஆண்டு திருமண நாளை மே 2ம் தேதியன்று "MCForever" என்ற அழகான தலைப்புடன் த்ரோபேக் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார் மேக்னா. பத்து ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த இந்த காதல் ஜோடி கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?BJP MP Bajan in Vande Bharat : ஓடும் ரயிலில் பஜனை! பாஜக MP-யின் சர்ச்சை வீடியோVCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Embed widget