மேலும் அறிய
Advertisement
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
பாம்பன் ரயில் பாலத்தின் முழுமையான தரத்தை உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார்.
பாம்பன் புதிய ரயில் பாலம் தரம் குறைவாக இருப்பதாக இந்திய ரயில்வேக்கு தெற்கு ரயில்வே அதிகாரி சவுத்ரி ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், பாம்பன் ரயில் பாலத்தின் முழுமையான தரத்தை உறுதி செய்த பின்னரே திறந்திட வேண்டும் என ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி,
ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்:
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே மேம்பாலத்தில் கடல் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முழுமையான நடவடிக்கை இல்லை எனவும், தூண்களில் தற்போதே அரிப்பு தொடங்கியுள்ளதாகவும், புதிய பாலத்தில் சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் அதிக ஒலி ஏற்படுவதாகவும், புதிய பாலத்தில் உள்ள குறைகளை மறு ஆய்வு செய்து சரி செய்திட வேண்டும் எனவும் இந்திய ரயில்வேக்கு தெற்கு ரயில்வே அதிகாரி சவுத்ரி ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் திறக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ரயில்வே அதிகாரியே இது போன்ற அச்சமிகு ஆய்வறிக்கையை சமர்ப்பித்து இருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பாலத்தின் தரத்தை மறு ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்து விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிதம்:
இவ்வாறு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடலின் நடுவே தூக்கு ரயில்வே பாலம் அமைப்பது இந்திய ரயில்வேயிற்கு இதுவே முதல் அனுபவமாகும். ஆனால், மும்பை ஐஐடி நிபுணர் குழுவை அணுகி அவர்கள் அளித்த வடிவமப்பை ஏற்று புதிய பாலம் கட்டப்பட்டதாக மூத்த ரயில்வே பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதால் ரயில் இயக்குவதை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்துள்ளது. பாலத்தின் தரத்தினை முழுமையாக ஆராய வேண்டும் எனவும் சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் ஏராளமான பக்தர்களுக்கு இந்த பாலம் தான், பிரதானமான இணைப்பாகும். அப்படி இருக்கையிலும், பாலத்தின் தரத்தில் சமரசம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion