Entertainment Headlines June 16: லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள்... ஆதிபுருஷ், பொம்மை ரிலீஸ்... இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.
‘நான் ரெடி’ .. விஜய் பிறந்த நாளில் வெளியாகும் முதல் பாடல்..மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் நடிகர் விஜய் 2வது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார். இதில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படிக்க
பிரம்மாண்டமாக உருவாக உள்ள பிச்சைக்காரன் 3.... பட்ஜெட் இத்தனை கோடிகளா?
பிச்சைக்காரன் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிச்சைக்காரன் 3 பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் படபிடிப்பு வரும் 2025ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளதாகவும்,100 கோடி பட்ஜெட்டில் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்குநர் சசியும், 2ஆம் பாகத்தை விஜய் ஆண்டனியும் இயக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
2 முறை ஆஸ்கர்.. மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள்... ஹாலிவுட் நடிகை க்ளெண்டா ஜாக்ஸன் மறைவு!
இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்ற நடிகர் க்ளெண்டா ஜாக்ஸன் (Glenda Jackson) காலமானார்.1960 முதல் 1970 வரையிலான காலங்களில் புகழ்பெற்ற நடிகையாகத் திகழ்ந்த இவர் வுமன் இன் லவ் ( women in love) மற்றும் எ டச் ஆஃப் க்ளாஸ் ( a touch of class) ஆகியத் திரைப்படங்களுக்காக இரண்டு முறை ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். இவர் நடிப்பைத் தவிர்த்து அரசியலிலும் குறிப்பிட்ட காலம் இருந்துள்ளார். 1997ஆம் ஆண்டு டோனி ப்ளையரின் (tony blair) ஆட்சியின் கீழ் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
‘ஆதிபுருஷ் நல்லா இல்லை’ .. தியேட்டர் வாசலில் கமெண்ட் சொன்ன ரசிகருக்கு சரமாரி அடி உதை..!
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படம் குறித்து எதிர்மறையாக விமர்சனம் சொன்ன ரசிகரை பிரபாஸ் ரசிகர்கள் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி ஓம் ராவத் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனான சன்னி சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் படிக்க
லாஜிக்கே இல்லாத கதை.. ஆனால் மேஜிக் பண்ணியதா? - பொம்மை படத்தின் விமர்சனம் இதோ..!
யதார்த்த இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், சாந்தினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘பொம்மை’. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பொம்மை படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம். மேலும் படிக்க
அட மிரட்டலா இருக்கே...! மாமன்னன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!
இன்று மாலை 6 மணிக்கு மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நிலையில், படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இத்திரைப்படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. மேலும் படிக்க