![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Adipurush:‘ஆதிபுருஷ் நல்லா இல்லை’ .. தியேட்டர் வாசலில் கமெண்ட் சொன்ன ரசிகருக்கு சரமாரி அடி உதை..!
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படம் குறித்து எதிர்மறையாக விமர்சனம் சொன்ன ரசிகரை பிரபாஸ் ரசிகர்கள் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Adipurush:‘ஆதிபுருஷ் நல்லா இல்லை’ .. தியேட்டர் வாசலில் கமெண்ட் சொன்ன ரசிகருக்கு சரமாரி அடி உதை..! Prabhas fans beat up man for giving negative review to Adipurush Adipurush:‘ஆதிபுருஷ் நல்லா இல்லை’ .. தியேட்டர் வாசலில் கமெண்ட் சொன்ன ரசிகருக்கு சரமாரி அடி உதை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/16/8a83ab06855b6ff76f48bbfdc3e53cb81686908320562572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படம் குறித்து எதிர்மறையாக விமர்சனம் சொன்ன ரசிகரை பிரபாஸ் ரசிகர்கள் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி ஓம் ராவத் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனான சன்னி சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா இருவரும் இசையமைத்துள்ள இப்படம் இன்று இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியானது.
முன்னதாக கடந்தாண்டு வெளியான ஆதிபுருஷ் படத்தின் டீசரும், கடந்த வாரம் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. அதேசமயம் படத்துக்கு முதலில் ரூ.400 கோடி பட்ஜெட் சொல்லப்பட்ட நிலையில், டீசரில் வந்த கிராபிக்ஸ் காட்சிகள் ட்ரோல் செய்யப்பட்டதால் மேலும் ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 6 ஆம் தேதி ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
When you say you didn’t like #Adipurush.. pic.twitter.com/haRJIvVCvb
— LetsCinema (@letscinema) June 16, 2023
இதில் பேசிய இயக்குநர் ஓம் ராவத், ஹனுமனுக்காக ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் ஒரு சீட் ஒதுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதன்படி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கியது. தமிழ் தவிர்த்து பிற மொழிகளில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இன்று படம் வெளியானது. மற்ற மொழிகளில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது.
பிரபாஸ் ரசிகர்கள் நள்ளிரவு முதலே தியேட்டரில் குவிய தொடங்கினர். மேலும் இயக்குநர் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, தியேட்டரில் பிற மாநிலங்களில் ஹனுமனுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. இதனிடையே ஆதிபுருஷ் படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், இப்படம் பற்றி எதிர்மறையான விமர்சனம் சொன்ன ரசிகர் ஒருவருக்கு சரமாரியாக அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.
Adipurush Review: பிரபாஸின் அவதாரம் ஆதிபுருஷ்! ரசிகர்களுக்கு சந்தோஷமா? சங்கடமா? இதோ விமர்சனம்!
அந்த வீடியோவில், ‘அனைத்து கேரக்டர்களையும் பிளே ஸ்டேஷன் கேம்களில் இருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தில் ஹனுமான், பேக்ரவுண்ட் ஸ்கோர் மற்றும் ஆங்காங்கே சில 3டி காட்சிகள் தவிர எதுவும் இல்லை. பிரபாஸின் கெட்டப் சுத்தமாக பொருந்தவில்லை. பாகுபலியில், அவர் ஒரு ராஜாவைப் போல இருந்தார், ஒரு ராயல்டி இருந்தது. அதைப் பார்த்து தான் இந்த கேரக்டருக்கு அவரை எடுத்துள்ளனர். ஓம் ராவத் பிரபாஸை சரியாகக் காட்டவில்லை’ என படம் பார்த்த ரசிகர் ஒருவர் தெரிவிக்கிறார். அதைக் கேட்டு கடுப்பான பிரபாஸ் ரசிகர்கள் அவரை தாக்குகின்றனர். இதற்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)