Entertainment Headlines: 16 ஆண்டுகளைக் கடந்த அஜித்தின் பில்லா.. நெப்போலியன் - குஷ்பு டான்ஸ்.. சினிமா ரவுண்டப்..
Entertainment Headlines: திரையுலகில் இன்றைய அதாவது டிசம்பர் 14ஆம் தேதி முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
![Entertainment Headlines: 16 ஆண்டுகளைக் கடந்த அஜித்தின் பில்லா.. நெப்போலியன் - குஷ்பு டான்ஸ்.. சினிமா ரவுண்டப்.. Entertainment Headlines Today December 14 16 Years Of Billa Chithha Mysskin Kannagi Movie Entertainment Headlines: 16 ஆண்டுகளைக் கடந்த அஜித்தின் பில்லா.. நெப்போலியன் - குஷ்பு டான்ஸ்.. சினிமா ரவுண்டப்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/14/16ba518732c71906220d6111db73ea3e1702553546561102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
16 Years Of Billa : அஜித்துக்கு கேங்ஸ்டர் முகம் கொடுத்த பயணம்.. 16 ஆண்டுகளைக் கடந்தது பில்லா..
அஜித் குமார் நடிப்பில் பில்லா திரைப்படம் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியானது. நயன்தாரா, பிரபு, நமிதா, ரஹ்மான் , சந்தானம், ஜான் விஜய் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். பில்லா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளன. விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது பில்லா திரைப்படம். மேலும் படிக்க
Watch Video : பஞ்சுமிட்டாய் சேல கட்டி.. மீண்டும் நெப்போலியன் - குஷ்பு.. ஹார்டின்களை அள்ளிவிட்ட ரசிகர்கள்..
தமிழ் சினிமாவின் உயர்ந்த நடிகர், கிராமத்து மண்வாசனைக்கு ஏற்ற முகம், நயவஞ்சகமான வில்லன் என பல ஆங்கிள்களில் கொண்டாடப்பட்ட ஒருவர் நடிகர் நெப்போலியன். குறுகிய காலகத்திலேயே முன்னணி நடிகர் அந்தஸ்த்தை பெற்ற நடிகர் நெப்போலியன் சில நாட்களுக்கு முன்னர் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் படிக்க
Chithha : ஒரு குழந்தையை நடிக்க வைப்பது இவ்வளவு சிரமமா...வைரலாகும் சித்தா படத்தின் டப்பிங் வீடியோ
நடிகர் சித்தார்த் நடித்து கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியான திரைப்படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு அருண்குமார் இந்தப் படத்தை இயக்கினார். நிமிஷா சஜயன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சித்தா திரைப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது. பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதை மையக் கதையாக வைத்து எடுக்கப்பட்ட சித்தா திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் பல்வேறு முக்கியமான விவாதங்களை சித்தா திரைப்படம் துவங்கி வைத்தது. மேலும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றன. குறிப்பாக சந்தோஷ் நாராயணன் பாடிய உனக்கு தான் பாடல் கோடிக்கணக்கான ரசிகர்களை எட்டியுள்ளது. மேலும் படிக்க
Mysskin - Pandiarajan : மிஷ்கின் போட்ட கண்டிஷன்... ஆடிப்போன பாண்டியராஜன்... அஞ்சாதே அனுபவம் பகிர்ந்த இயக்குநர்!
தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து நடிகரான ஏராளமானவர்களை கடந்து வந்துள்ளோம். அந்த வகையில் மிகவும் வித்தியாசமான ஒரு மனிதர்தான் பாண்டியராஜன். 1985-ஆம் ஆண்டு வெளியான 'கன்னி ராசி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாண்டியராஜன். அவர் இயக்கிய அடுத்த படமான 'ஆண் பாவம்' திரைப்படம் மூலம் நடிகராகவும் பரிணாமம் எடுத்தார். மேலும் படிக்க
Kannagi Movie: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் ட்ரெய்லர் வரை.. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகும் “கண்ணகி”
நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணகி’ படம் நாளை வெளியாகும் நிலையில் அப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. யஹ்வந்த் கிஷோர் இயக்கியுள்ள ‘கண்ணகி’ படம் நாளை (டிசம்பர் 15) தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஹாலினி, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராம்ஜீ ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சரத்குமார் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கார்த்திக் நேத்தா கண்ணகி படத்துக்கான பாடல் வரிகள் எழுதியுள்ளார். மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)