Entertainment Headlines August 01: டாடா கவினுக்கு கல்யாணம்.. கொந்தளித்த ராஜ்கிரண்... D50 படத்தில் அனிகா... இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines Today August 01: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
‘டாடா’ நாயகன் கவினுக்கு விரைவில் திருமணம்.... பொண்ணு யாருன்னு தெரியுமா?
சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியர்களில் நடித்து வந்த கவின் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் தோல்வி அடைந்து இருந்தாலும், லிப்ட், டாடா படத்தின் மூலம் கவின் பிரபலமானார். டாடா படத்தில் தனியாக குழந்தையை வளர்க்கும் தந்தையாக இருந்த கவினின் நடிப்பு பாராட்டை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் கவின் தமிழ் சினிமாவில் முக்கியமான நபராக மாறியுள்ளார். மேலும் படிக்க
பால்பாண்டியாக வந்த பாரதிராஜா... வாழ்த்துக் கவிதை பாடி உற்சாகமூட்டிய வைரமுத்து!
இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிரபல பாடலாசிரியரும் பாரதிராஜாவின் நண்பருமான வைரமுத்து அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து பாடல் பாடி உற்சாகமூட்டினார். இது தொடர்பாக வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து ”எழுந்து வா இமயமே” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார் வைரமுத்து. மேலும் படிக்க
’இஸ்லாமியர்கள் குணம் இதுதான்; கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்...’ - சீமானை சாடினாரா ராஜ்கிரண்!
நல்லி எலும்பை சுக்கு நூறாக கடித்து, வேட்டியை மடித்துக்கட்டி ஹீரோவுக்கான ஸ்டீரியோ டைப்பை உடைத்து, எளிய மனிதனாக கிராமத்தானாக தன்னை சினிமாவில் அடையாளப்படுத்தியவர் ராஜ்கிரண். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ராஜ்கிரணின் இயற்பெயர் காதர். சினிமாவுக்காக தனது பெயரை ராஜ் கிரண் என மாற்றிக் கொண்டார். ஹீரோவாக நடித்து வந்த ராஜ்கிரண் சில கால இடைவெளிக்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் களமிறங்கினார். மேலும் படிக்க
குணச்சித்திர நடிகராக சிகரம் தொட்டவர்... யதார்த்தமான நடிப்புக்கு சொந்தக்காரர்... டெல்லி கணேஷ் பிறந்தநாள் இன்று
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவே இருந்த போதிலும் தனக்கென ஒரு தனி புகழும் அந்தஸ்தும் பெற்று இன்று வரை கோலோச்சி தமிழ் ரசிகர்கள் மனங்களில் நெருக்கமாக இருந்து வரும் நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் டெல்லி கணேஷ். ஒரு திரைப்படம் என்ன தான் ஹீரோ ஹீரோயின். இவர்களை சுற்றி நகர்ந்தாலும் முழுமையாக ஒரு திரைப்படத்தை ரசிகர்களை ரசிக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் குணச்சித்திர நடிகர்கள். மேலும் படிக்க
மைக் மோகனுடன் இணைந்த மிகப்பெரிய தாதா - ஹரா படக்குழு வெளியிட்ட அப்டேட்
1990 காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் வெள்ளி விழா நாயகனாக அழைக்கப்பட்டவர் நடிகர் மோகன். ரஜினி, கமல் நடிப்பில் உச்சக்கட்டத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு நிகராக புகழோடு இருந்தவர் தான் மோகன். இவருடைய சாதுவான முகபாவனை பெண்களை அதிகளவு ஈர்த்தது. அதிக செலவு இல்லாமல் மோகனை வைத்து பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் வெற்றிப்பெற்று வசூலை வாரி குவித்ததால் தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாக மோகன் வலம் வந்தார். மேலும் படிக்க
தியேட்டரில் 50 நாள்களைக் கடந்த ’போர் தொழில்’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்டம் தியேட்டரிலேயே 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக 75 நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தையும் இதுவரை தியேட்டரில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடி ரிலீஸ் எப்போ என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
தனுஷ் உடன் இரண்டாம் முறை கூட்டணி... 'டி50' திரைப்படத்தில் இணைந்த இளம் நாயகி அனிகா!
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை அடுத்து டி50 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் அனிகா சுரேந்தர். இந்தப் படத்தை தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்தில் எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி, சந்தீப் கிஷன் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ளனர். மேலும் படிக்க