Entertainment Headlines: துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்.. தளபதி 68 பூஜை.. லோகேஷூக்கு காயம்.. சினிமா செய்திகள் இன்று!
Entertainment Headlines Oct 24: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
ஹிஸ் நேம் இஸ் ஜான்.. வெளியானது விக்ரமின் -‘துருவ நட்சத்திரம்’ புதிய ட்ரெய்லர்!
கெளதம் மேனன் இயக்கத்தில் விகரம் நடித்து உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. விக்ரம் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் என பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். முதலில் சூர்யா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு பின் நடிகர் விக்ரம் இப்படத்தில் நடிக்க முடிவானது. கடந்த 2017ஆம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணச்சிக்கல்களால் கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் கடந்து தற்போது படம் வெளிவர இருக்கிறது. மேலும் படிக்க
அறிமுகத்திலேயே அமர்க்களப்படுத்திய வெங்கட்பிரபு: வீடியோவுடன் தளபதி 68 அப்டேட்..! ரசிகர்கள் செம குஷி..!
நடிகர் விஜய் நடிக்கவுள்ள 68வது படத்தின் படத்தின் பூஜை வீடியோ விஜயதசமியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 24) வெளியாகியுள்ளது. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிகில் படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் படம் தயாரிக்கவுள்ளது. அவரின் 68வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மேலும் படிக்க
“பிரஷாந்த் முதல் பிரபுதேவா வரை” .. “தளபதி 68” படத்தில் இணைந்த பிரபலங்கள்.. முழு விபரம்..!
தளபதி 68 படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் விஜயதசமியை முன்னிட்டு வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
இந்தியாவில் தாறுமாறு வசூல்.. 5 நாட்களில் லியோ படத்தின் வசூல் என்ன தெரியுமா?
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் 5வது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் நடித்துள்ள லியோ படம் உலகமெங்கும் தியேட்டகளில் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படிக்க
அச்சோ.. ரசிகர்கள் படையால் தள்ளுமுள்ளு.. லோகேஷ் கனகராஜூக்கு காயம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழியில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே மொத்தம் 900 திரையரங்குகளில் வெளியாகியது. இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் லியோ படத்திற்காக திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் படிக்க
நம்ம ஊருல துப்பாக்கியா.. லியோ படத்தின் சூப்பர் ஸ்னீக் பீக்.. விஜய் - கௌதம் மேனன் காட்சி வெளியீடு!
லியோ படத்தில் நடிகர் விஜய் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இடம்பெற்றிருக்கும் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதனால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. மேலும் படிக்க