Leo box office collections Day 5: இந்தியாவில் தாறுமாறு வசூல்.. 5 நாட்களில் லியோ படத்தின் வசூல் என்ன தெரியுமா?
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் 5வது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் 5வது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த லியோ படம்
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் நடித்துள்ள லியோ படம் உலகமெங்கும் தியேட்டகளில் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் லியோ படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், பாபு ஆண்டனி, வையாபுரி என பல பிரபலங்களும் இருந்ததால் ரிலீசுக்கு முன்னால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் லியோ வெளியான நிலையில் லியோ படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
தொடரும் வதந்தி
இந்த படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. முதல் நாளில் லியோ படம் ரூ.148.5 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. நடப்பாண்டில் முதல் நாளில் அதிகம் வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையையும் பெற்றது. தொடர்ந்து அக்டோபர் 22 முதல் 24 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை தினங்கள் வந்தது. ஏற்கனவே நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் லியோ படத்தை பார்க்க குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகவே சென்று கொண்டிருக்கும் நிலையில், படத்தை பற்றிய வதந்திகளும் மறுபக்கம் காட்டுத்தீயாக பரவி வருகிறது. படத்தில் சொல்லப்பட்டது ஒரிஜினல் பிளாஷ்பேக் காட்சிகள் இல்லை, லியோ பாகம் 2 வருகிறது என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் படக்குழுவுக்கே தெரியாத பல விஷயங்கள் தகவல்களாக உலா வருகிறது.
தாறுமாறு வசூல்
இந்நிலையில் லியோ படத்தின் 5வது நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் ரூ.26 கோடி, மலையாளத்தில் ரூ.7 கோடி, கர்நாடகாவில் ரூ.3 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.2.50 கோடி, வட இந்தியாவில் ரூ.2.50 கோடி என மொத்தம் ரூ.41 கோடி வசூலாகியுள்ளதாக sacnilk தளம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லியோ படம் இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க: Arjun Sarja : ரகுவரன் முதல் மன்சூர் அலிகான் வரை... டஃப் கொடுத்த ஆன் ஸ்கிரீன் வில்லன்கள்: மனம் திறந்த அர்ஜூன்