Entertainment Headlines: இதயங்களைக் குவிக்கும் சமந்தா ஃபோட்டோ.. பொங்கலுக்கு வரும் கேப்டன் மில்லர்.. சினிமா ரவுண்ட் அப்!
Entertainment Headlines Nov 09: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
பொங்கலுக்கு ரிலீசாகும் கேப்டன் மில்லர்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் மோதும் தனுஷ்?
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராக்கி, சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துளார். வரலாற்று பாணியில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் தனுஷுக்கு ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்கள் தவிர படத்தில் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படிக்க
அட.. ஆர்யா நடிப்பில் செம திகில் இணைய தொடர்.. 'தி வில்லேஜ்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய ஹாரர் சீரிஸ் ‘தி வில்லேஜ்’. மில்லிந்த் ராவ் இயக்கியிருக்கும் இந்தத் தொடருக்கு ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் இயக்குநர் தீரஜ் வைதி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் திரைக்கதை எழுதியுள்ளார்கள். ஸ்டுடியோ சக்தி ப்ரோடக்ஷன்ஸ் இந்தத் தொடரை தயாரித்துள்ளது. ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன் ஜார்ஜ் மாயன், பி. என் சன்னி, முத்துக்குமார் கே, கலைராணி எஸ்.எஸ், ஜான் கொக்கென், பூஜா, வி ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் இந்த தொடரின் நடித்துள்ளார்கள். மேலும் படிக்க
என் கதையை சொல்கிறேன்; மீண்டு வாருங்கள் - கவர்ச்சி உடையுடன் சமந்தா வெளியிட்ட பதிவு
மயோசிட்டிஸ் பாதிப்பினால் தற்போது சினிமாவில் இருந்து சிறு ப்ரேக் எடுத்துள்ள சமந்தா, தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இந்நிலையில் தனியார் ஃபேஷன் மேகசினுக்கான ஃபோட்டோஷூட்டில் கலந்துகொண்டு அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை வாவ் சொல்லவைத்து லைக்ஸ் அள்ளி வருகிறது. மேலும் படிக்க
திரைப்பட விமர்சகர்களே ஜாக்கிரதை...கேரளாவில் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!
மலையாள இயக்குநர் உபைனி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ‘ரஹேல் மக்கன் கோரா’ என்கிற படம் வெளியானது. தன்னுடைய படத்துக்கு வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்கள் செய்து தன்னிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக இயக்குநர் உபைன் கேரள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பிரபல யூடியூப் மற்றும் இன்ஸா பயன்பாட்டாளர் உள்ளடக்கிய மூன்று பேர்களின் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. மேலும் படிக்க
“சொன்னது எல்லாமே பொய் .. நிக்ஸன் மேல மரியாதையே போய்டுச்சி” - உண்மையை வெளிப்படுத்திய வினுஷா..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராப் பாடகர் நிக்ஸன் தன்னை உருவக்கேலி செய்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை சீரியல் நடிகை வினுஷா தேவி அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 38 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தொடக்கம் முதலே இந்நிகழ்ச்சி மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தைகள் பேசுவது, உருவக்கேலி செய்வது, கும்பலாக சேர்ந்து கொண்டு மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவது, இரட்டை அர்த்தங்களில் பேசுவது என சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. மேலும் படிக்க
பிக்பாஸ் வீட்டில் திடீரென வந்த நீதிமன்றம் - குழாயடி சண்டையில் விசித்ரா vs பூர்ணிமா..!
பிக்பாஸ் வீட்டில் திடீரென வந்த நீதிமன்றத்தில், ஏட்டிக்கு போட்டியாய் சண்டையிடும் விசித்ரா மற்றும் பூர்ணிமாவின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 கந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதை வைத்து இந்த வாரத்தில் பிக்பாஸ் வீடு களேபரமானது. விசித்ரா, அர்ச்சனா ஒரு கூட்டணியாகவும், பூர்ணிமா, மாயா, ஜோவிகா, ஐஷூ உள்ளிட்டோர் மற்றொரு கூட்டணியாக இணைந்து அடித்து கொள்ளாத குறையாக சண்டையில் ஈடுபட்டனர். மேலும் படிக்க