Entertainment Headlines: கமல்ஹாசன் - மணிரத்னத்தின் Thug Life.. ராஷ்மிகாவை பதறவைத்த வீடியோ.. சினிமா செய்திகள் இன்று!
Entertainment Headlines Nov 06: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
வெற்றிக்கூட்டணியின் வெறித்தனமான THUG LIFE..! மிரட்டல் அடியுடன் டைட்டிலை அறிமுகம் செய்த கமல்ஹாசன்!
நாளை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 69 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில் கமல் படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது படக்குழு. வழக்கமாக மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு கவித்துவமான வரிகை வைக்கப் படும் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இந்தப் படத்திற்கு தக் லைஃப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
அட.. கமல் - மணிரத்னத்தின் KH234 போஸ்டரில் ‘பாரதியார்’ குறியீடு.. இத கவனிச்சீங்களா?
1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி இணந்துள்ளார்கள். கமல்ஹாசனின் 234ஆவது படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்க இருக்கிறது. மேலும் படிக்க
நீ புடிச்ச முயலுக்கு மூணு கால்.. மன்னிப்பு கேட்டிருக்கலாம்.. பிரதீப் ஆண்டனியை மிஸ் செய்யும் கூல் சுரேஷ்!
கடந்த மாதம் ஒன்றாம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். அதேநேரம் பவா செல்லதுரை விருப்பத்தின் பேரில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்தச் சூழலில் நடிகர் தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா, அன்ன பாரதி என 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தனர். மேலும் படிக்க
நடிகை ரஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ: கடும் கண்டனத்தை பதிவு செய்த அமிதாப்!
தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி ஒரு பான் இந்திய நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 'கீதா கோவிந்தம்' படம் மூலம் இளைய தலைமுறையினரின் ஃபேவரட் நடிகையான ராஷ்மிகா, 'சுல்தான்' திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் படிக்க
விருந்து நிகழ்ச்சிகளில் பாம்பு விஷம் சப்ளை...சிக்கலில் பிக்பாஸ் பிரபலம்...நடந்தது என்ன?
இந்தியில் ஓடிடி தளங்களில் வெளியான பிக்பாஸ் இரண்டாவது சீசனின் வெற்றியாளர் எல்விஷ் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் தமிழுக்கு எப்படி ரசிகர் பட்டாளம் ஏராளமோ, அதேபோல தான் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் மவுசு அதிகம். பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் முன்பு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பும் என பிரித்து கூறும் அளவுக்கு அவர்களை மக்களிடையே பிரபலப்படுத்துவது இந்த நிகழ்ச்சி தான். மேலும் படிக்க
”திருமணமாக கைகூடிய காதல்” : அமலா பால் கணவர் ஜகத் தேசாய் யார் தெரியுமா?
நடிகை அமலாபால் தனது காதலரான ஜகத் தேசாயை இன்று திருமணம் செய்து கொண்டார். கேரளாவை பூர்விகமாகக் கொண்டவரான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அமலா பால், தொடர்ந்து கோலிவுட்டில் வெற்றிநாயகியாக வலம் வரத் தொடங்கினார். மேலும் படிக்க