Pradeep Antony: நீ புடிச்ச முயலுக்கு மூணு கால்.. மன்னிப்பு கேட்டிருக்கலாம்.. பிரதீப் ஆண்டனியை மிஸ் செய்யும் கூல் சுரேஷ்!
பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு வாங்கி பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட நிலையில், தன்னுடைய வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார் கூல் சுரேஷ்.
![Pradeep Antony: நீ புடிச்ச முயலுக்கு மூணு கால்.. மன்னிப்பு கேட்டிருக்கலாம்.. பிரதீப் ஆண்டனியை மிஸ் செய்யும் கூல் சுரேஷ்! bigg boss tamil season 7 cool suresh sends message to pradeep antony after he gets evicted Pradeep Antony: நீ புடிச்ச முயலுக்கு மூணு கால்.. மன்னிப்பு கேட்டிருக்கலாம்.. பிரதீப் ஆண்டனியை மிஸ் செய்யும் கூல் சுரேஷ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/479bb0c184fb9f1b368091f69cf749451699259980905572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக்பாஸ் சீசன் 7 தமிழ்
கடந்த மாதம் ஒன்றாம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். அதேநேரம் பவா செல்லதுரை விருப்பத்தின் பேரில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்தச் சூழலில் நடிகர் தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா, அன்ன பாரதி என 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தனர். இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் 18 போட்டியாளர்கள் இடம்பெற்றனர். இந்த சீசனில், பிக்பாஸ் வீடு, சிறிய பிக்பாஸ் வீடு என போட்டியாளர்களை பிரித்து வைத்திருப்பதால், சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு
போட்டியாளர்களுக்கான டாஸ்க் மற்றும் சமையல் நேரங்களில் பிரதீப் மற்றவர்களிடம் எல்லை மீறியதாக குற்றச்சாட்டு , கூல் சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரதீப், தவறான வார்த்தையை விட்ட வீடியோ ஆகியவை சென்ற வாரம் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து கழிவறையின் கதவைத் திறந்து வைத்திருந்தது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பூர்ணிமா, மாயா, மணி, ஜோவிகா, ஐஷூ, நிக்சன், விஷ்ணு உள்ளிட்ட போட்டியாளர்கள் வார இறுதி எபிசோடில் கமலிடம் கூறினர்.
இதனைத் தொடர்ந்து பிரதீப் இருக்கும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிகை மாயா கிருஷ்ணன் கூறியதைத் தொடர்ந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். கமல்ஹாசனின் இந்த முடிவு இணையதளத்தில் பல்வேறு விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் பிரதீப் ஆண்டனிக்கு இணையதளத்தில் ஆதரவும் அதிகரித்து வருகிறது.
கூல் சுரேஷ் ஆதரவு
#coolsuresh - #Pradeep Ne Ponathu Enaku Romba Varuthama Iruku#BiggBossTamil7 #BiggBossTamil #BiggBoss7Tamil #BBTamilSeason7 pic.twitter.com/EGnYKiYRNe
— BBTamilVideos (@BB_Tamil_Videos) November 6, 2023
தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கூல் சுரேஷ் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவளிக்கு வகையில் பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கேமராவைப் பார்த்து பேசும் கூல் சுரேஷ், ”எவ்வளவோ திறமைகள் இருந்து இந்த நிகழ்ச்சியில் இருந்து நீ வெளியேற்றப்பட்டது மனவருத்தமான ஒரு விஷயம்தான். எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் நீ ஒரு கடுமையான போட்டியாளராக இருப்பாய் என்று தெரியும்.
டைட்டில் பரிசை ஜெயிக்கவில்லை என்றால் கூட இரண்டாம் இடத்தில் நீ வந்துவிடுவாய் என்று நான் நினைத்தேன். ஆனால் எல்லாம் விதி. வீட்டில் உனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு நீ பெண்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால் நீ எப்போது நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுனு தான் நின்ன “ என்று கூல் சுரேஷ் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)