மேலும் அறிய

‛என் மகனை பேய் படங்கள் பார்க்க அனுமதிப்பதில்லை’ - பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி!

இம்ரான் ஹாஷ்மி மகன் கடந்த 2014 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் இம்ரான் காஷ்மி.  தற்போது டைபக் என்னும் ஹாரர் படத்தில் நடித்துள்ளார். பிரித்திவிராஜ் , பிரியா ஆனந்த் நடிப்பில் , ஜெயகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த  EZRA  என்னும்  திகில் மலையாள படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. டைபக் படத்தை  T-Series மற்றும் Panorama Studios இணைந்து தயாரித்து வருகின்றன.  EZRA படத்தை இயக்கிய ஜே.கே (  ஜெயகிருஷ்ணன் ) இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகிறார். படத்தில் நிகிதா தத்தா , பிரியா ஆனந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தர்ஷனா பங்கித் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் இம்ரான் ஹாஷ்மி ராஜன் என்னும் கதாபாத்திரத்திலும் , நிகிதா தத்தா மஹி என்னும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். டைபக் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற அக்டோபர் 29 ஆம் தேதி டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.


‛என் மகனை பேய் படங்கள் பார்க்க அனுமதிப்பதில்லை’ - பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி!
இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இம்ரான் ஹாஷ்மி , தனது மகன் அயானை ஹாரர் படங்கள் பார்க்க அனுமதிப்பதில்லை என கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இம்ரான் ஹாஷ்மி நிறைய திகிலூட்டும் ஹாரர் படங்களில் நடித்துள்ளார். அப்படி ஒரு படத்தை தனது மகன் அயானுடன்  பார்த்த பொழுது , அயான் மிகவும் பயந்து போனதை புரிந்துக்கொண்டு இனிமேல்  அயார் ஹாரர் படங்கள் பார்ப்பதற்கு ‘நோ’ சொல்லிவிட்டாராம். அயான் மிகவும் சென்சிட்டிவான குழந்தை என கூறும் இம்ரான், இரவில் அவனுக்கு கெட்ட கனவுகள் வருவதையும் நான் விரும்பவில்லை. என மகன் மீது கொண்ட அதீத பாசம் மற்றும் அக்கறையை பகிர்ந்துள்ளார். இம்ரான் ஹாஷ்மி மகன் கடந்த 2014 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் . 5 வருட போராட்டத்திற்கு பிறகு அயான் அதிலிருந்து மீண்டுள்ளார்.   புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் எப்படியான வாழ்க்கை மாறுதலை கொண்டிருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் The Kiss of Life என்ற புத்தகத்தையும் வெளியிட்டிருந்தார்.


‛என் மகனை பேய் படங்கள் பார்க்க அனுமதிப்பதில்லை’ - பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி!

ஜெய கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள டைபக் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த ஹாஷ்மி, படத்தின் இறுதி காட்சிகள் அதாவது கிளைமேக்ஸ் காட்சிகள் தனக்கு மிகவும் கடினமானதாக இருந்ததாகவும்  குறிப்பிட்டுள்ளார். இம்ரான் ஹாஷ்மி தற்போது சல்மான் கான் மற்றும் கத்ரினா கைஃப் நடிக்கும் டைகர் 3 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இம்ரான் ஹாஷ்மியின் உடலில் சில மாற்றங்கள் தேவைப்படுவதால் , அதிக நேரத்தை உடற்பயிற்சி கூடங்களிலேயே கழித்து வருகிறாராம். முன்னதாக அமிதாபட்சன் மற்றும் இம்ரான் ஹாஷ்மி காம்போவில் வெளியான செஹ்ரே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. முதன் முறையாக அமிதாப் , இம்ரான் கூட்டணியில் உருவான இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் அமேசான் பிரைமில் வெளியானது. படத்தில் சுசாந்த் சிங்கின் காதலி நேகா சக்கரபோர்த்தி நாயகியாக நடித்திருந்தார். மிஸ்ட்ரி - திரில்லர் வகையில் இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget