மேலும் அறிய

RVM : ரிமோட் வாக்குப்பதிவு முறை; புலம்பெயர்ந்த நபர்களும் வாக்களிக்க புதிய வசதியை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு!

RVM :புலம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிக்கும் முறையில் புதிய முறையை அமல்படுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிக்கும் முறையில் புதிய முறையை அமல்படுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அறிவிப்பை வெளியிட்டிருக்கும் தலைமைத் தேர்தல் ஆணையம், இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை ( Remote Electronic Voting Machine) தயாரித்துள்ளதாகவும், இதன்  மூலம் 72 தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களின் தகவல்களை கையாள முடியும் என்றும் தெரிவித்துள்ளது. 

ரிமோட் வாக்குப்பதிவு குறித்து எட்டு தேசிய கட்சிகள் 57 மாநில கட்சிகளுக்கு ஜனவரி 16 ஆம் தேதி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

நவீன தொழில்நுட்ப யுகத்தில் புலம்பெயர்ந்தோர் இருந்த இடத்தில் இருந்தவாறு வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.  30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யாதது கவலை அளிக்கும் விஷயம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.

வாக்களிக்கும் உரிமையை சரிவர பயன்படுத்துவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது. நாட்டுக்குள் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த தரவுகள் இல்லாத நிலையில், இருக்கின்ற தரவுகளை வைத்து ஆய்வு செய்ததில், 85 சதவீத புலம் பெயர்ந்தோர் உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு பணி மற்றும் இதர காரணங்களுக்காக சென்றிருப்பது தெரியவந்துள்ளது.  

உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்யும் எம்-3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.  வாக்குப்பதிவுக்காக சொந்த மாநிலங்களுக்கு செல்லாமல் தற்போது இருக்கும் இடங்களில் வாக்களிக்க இந்த நடைமுறை வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

தொலைதூரத்தில் இருக்கும் வாக்குச்சாவடியில் இருந்து இந்த இயந்திரம் மூலம் வாக்களிக்க முடியும். இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த  கூட்டம் ஒன்றை தேர்தல் ஆணையம் அழைத்துள்ளது.  அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளுக்கு ஜனவரி 16-ந் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் செய்து காட்டுவார்கள். அரசியல் கட்சிகளிடமிருந்து எழுத்து மூலமான கருத்துக்களை 31.01.2023-க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Ministers Delhi Visit :  “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

உதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Ministers Delhi Visit :  “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை மண் சரிவு - நிறுத்தப்பட்ட மீட்பு பணி? ஏன் இந்த தாமதம்?
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
கஞ்சா போதையில் கங்கை அமரன் ரகளை! நைட்டியுடன் அட்ராசிட்டி!
Telephone Auction: பெருக்கெடுத்த ரத்த ஆறு, இனப்படுகொலை “மரணத்தின் ஆயுதம்” - ஆனால் ரூ.2 கோடிக்கு ஏலம் ஏன்?
Telephone Auction: பெருக்கெடுத்த ரத்த ஆறு, இனப்படுகொலை “மரணத்தின் ஆயுதம்” - ஆனால் ரூ.2 கோடிக்கு ஏலம் ஏன்?
Virat Kohli: 5ம் நம்பர் ஜெர்சியில் விராட் கோலி! ரன் மெஷின் அடிச்ச சிக்சஸரைப் பாருங்க!
Virat Kohli: 5ம் நம்பர் ஜெர்சியில் விராட் கோலி! ரன் மெஷின் அடிச்ச சிக்சஸரைப் பாருங்க!
Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய பணியில் இருந்த நபர் தற்கொலை! ஸ்தம்பித்து போன குழு!
Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய பணியில் இருந்த நபர் தற்கொலை! ஸ்தம்பித்து போன குழு!
Embed widget