(Source: Poll of Polls)
ஃபேஸ்புக், ட்விட்டர் முழுக்க ஆக்கிரமித்த பூங்கதவே தாழ் திறவாய் - அசத்திய பெண் குயில்கள்...
எல்லா நேரமும் பேஸ்புக்கும், ட்விட்டரும் சர்ச்சைகளின் தளமாகவே இருப்பதில்லை என்பதற்கு ஓர் இனிமையான சான்று சில தினங்களாக வைரலாகிக் கொண்டிருக்கும் இரண்டு இளம் குயில்கள் பாடும் பூங்கதவே தாள் திறவாய் பாடல்.
எல்லா நேரமும் பேஸ்புக்கும், ட்விட்டரும் சர்ச்சைகளின் தளமாகவே இருப்பதில்லை என்பதற்கு ஓர் இனிமையான சான்று சில தினங்களாக வைரலாகிக் கொண்டிருக்கும் இரண்டு இளம் குயில்கள் பாடும் பூங்கதவே தாழ் திறவாய் பாடல்.
#Nizhalgal #Illayaraja என்ற ஹேஷ்டேகுகள் கீழ் இந்தக் குயில்களின் பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதுவரை கேட்கவில்லை என்பவர்களுக்காக நாங்கள் இதோ விருந்து வைக்கிறோம்.
— Stranger (@Stranger0ffl) January 7, 2022
எத்தனை எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் கூட இளையராஜா ஏன் இன்னும் ரேடியோவிலும், ஸ்பாட்டிஃபை ஆப்பிலும், லாங் ட்ரைவிலும், கல்யாண வீடுகளிலும், காதல் தோல்விகளிலும், நியூ இயர் ஈவ்களிலும், ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என மின்னுகிறார் என்பதற்கும் இந்தக் குயில்கள் தான் சாட்சி.
வெறும் 1 நிமிடம் 2 விநாடிகள் தான் அந்த இரு பெண்களும் பாடுகின்றனர். ஆனால் அவர்களின் தேனாய்ப் பாயும் குரலும், சின்னச் சின்ன ஆலாபனைகளும் அத்தனை அழகாக இருக்கின்றன.
Language to samajh nhi aya.. but the smile at the end says they sang something great in this video 👌 https://t.co/QAjhEKyQQO pic.twitter.com/EM6vUytb3b
— 𝑨𝒗𝒊𝒌❋🥀 (@Avik_GillStan) January 8, 2022
இசைக்கு மொழி பேதமில்லை என்பதை உணர்த்தும் வகையில் ஒரு நெட்டிசன், இவர்கள் பாடும் வரிகள் புரியவில்லை. ஆனால் பாட்டு நன்றாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
இவர்கள் யார், எங்கு இசைப் பயிற்சி பெற்றார்கள் என்பதெல்லாம் இதுவரை தெரியவில்லை. ஆனால், இசையமைப்பாளர்களின் கண்களின் பட்டால் நிச்சயம் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது மட்டுமே இணையவாசிகளின் வாழ்த்தாக உள்ளது.
90 % 👁👁 10% song https://t.co/LZVgcjYhGU
— Certified loveless boy 🥀 (@jordenjjnn) January 8, 2022
இசையை ரசித்தது போல் அதைப் பாடும் பெண்களின் திருத்தமான அழகையும் குறிப்பாக ஆலாபனை பாடிய பெண்ணின் கண்ணழகையும் சிலாகிக்காதவர்கள் இல்லை.
ராஜாவின் இசை எந்த வடிவில் வந்தாலும் அது விருந்து தான். இன்னும் எத்தனை காலம் ஆனாலும் அழியாத கலை ராஜாவின் இசை. அவர் என்றும் இளமையான ராஜாவாக இருப்பார் இவர்களைப் போன்ற யுவதிகளும், யுவன்களும், சிறாரும் அவர் பாடலைப் பாடும் வரை..
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்